உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடிமை சாசனம் எழுதி கொடுத்த பழனிசாமி தி.மு.க.,வை விமர்சிப்பதா: அமைச்சர் துரைமுருகன்

அடிமை சாசனம் எழுதி கொடுத்த பழனிசாமி தி.மு.க.,வை விமர்சிப்பதா: அமைச்சர் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார் : ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:

மேட்டூர் அணையிலிருந்து, ஜூன் மாதம் பாசனத்திற்காக கட்டாயம் தண்ணீர் திறக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

கடும் நிபந்தனை

அவ்வழக்கில், பேபி அணை கட்டப்பட வேண்டும்; பராமரிப்பு பணிக்காக பொருட்களை எடுத்து செல்லும்போது, கேரள அரசு எந்தவிதத்திலும் தடங்கலும், தடையும் ஏற்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட, ஏழு கடும் நிபந்தனைகளை, கேரள அரசுக்கு, நீதிமன்றம் விதித்தது. அதையடுத்து, தமிழக அரசு சார்பில் பணிகள் துவங்கி உள்ளன. 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதை போல், கர்நாடகாவை சேர்ந்தவர்கள், குப்பையைக் கொண்டு வந்து தமிழக ஆற்றில் கொட்டுகின்றனர். காங்கேயநல்லுார் பாலாற்றில் குப்பை கொட்டுவதால், தண்ணீரே கெட்டுப்போய் விட்டது. வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றிலும் கழிவு கலக்கிறது; காவிரியிலும் கழிவு கலக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலைமையை எப்படி எதிர்கொள்வது என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அவரிடம், 'நானும் தலைவர் என, முதல்வர் ‍டில்லி சென்றார். அவர் குடும்ப நிதியை காப்பாற்றச் சென்றார். ஊழலுக்கு முறையான தண்டனையை, தி.மு.க., அனுபவிக்கும்' என, பழனிசாமி கூறியிருக்கிறாரே என, நிருபர்கள் கேட்டனர்.

குற்றச்சாட்டு

அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், இப்படியொரு மோசமான குற்றச்சாட்டைக் கூறுவார் என, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''பா.ஜ.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர், அடுத்தவர் பயணம் குறித்தெல்லாம் விமர்சிக்கத் தகுதியில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

S.L.Narasimman
மே 27, 2025 11:33

கருணாநிதி வீட்டிலே கீழே அமலாக்கதுறை ரைடு மேல்மாடியிலே 68 சீட் காங்கிரசுக்கு தாரைவார்த்து அடிமை சாசனம்எழுதி கொடுத்தது மாதிரின்னு நினைச்சாயா கொத்தடிமை .


Keshavan.J
மே 27, 2025 10:58

ஒரு பரம்பரை அடிமை இன்னொரு ஆளை பார்த்து அடிமை என்று கூவுது. என்னத்த சொல்றது. எல்லாம் நம் தலை எழுத்து


V Venkatachalam
மே 27, 2025 09:07

இந்த துச்சாதனன் தான் உதய நிதி என்ன அவன் மவன் வந்தால் அவனுக்கும் ஜே போடுவேன் ன்னு சொன்னதை மறந்துட்டு பேசுறான். பரம்பரை ஊழல் குடும்பத்துக்கு ஜே போடுறவன், இவன் எடப்பாடியை எதிர்த்து பேச லாயக்கில்லாதவன்.


raja
மே 27, 2025 08:33

அட ஒரு பரம்பரை கொத்தடிமை வாரிஸ்சுகளையும் கொத்தடிமையா மனம் நீ கூறலாமா இதை ...


Raghavan
மே 27, 2025 08:27

குடும்பமே ஒரு கொத்தடிமைக்கூட்டம் இதிலே மற்றவரை சொல்லுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இலாக்காவை திரும்ப வாங்க வழி இல்லை எதையாவது பேசி இப்படி காலம் தள்ளவேண்டியதுதான். 2026 ல் சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே?


Rajarajan
மே 27, 2025 08:09

எப்படிங்கனா ? நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக. மணிமேகலை, அட்சயபாத்திரம் அப்படி இப்படினு உருட்டினது எல்லாம் ??


RAAJ68
மே 27, 2025 07:06

கருப்பு பணத்தின் மொத்த உருவமும் இந்த தொப்பை முருகன் டெல்லிக்கு சென்று மோடியின் காலில் விழுந்தது அடிமை இல்லையா


Varadarajan Nagarajan
மே 27, 2025 07:04

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் குப்பைகளையும் கழிவு நீரும் கலப்பதாக அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டிய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றார். என்ன செய்வது என கூறும் அமைச்சர் அதை செய்யத்தெரிந்த நபருக்கு தனது பதவியை கொடுப்பதுதான் சாலச்சிறந்தது. பழனிச்சாமி அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளார் என கூறும் அமைச்சர் மூன்று தலைமுறைகளாக தான் சேவகம் செய்துகொண்டுள்ளதை என்னவென்று சொன்னால் பொது மக்களும் தெரிந்துகொள்ளலாம்.


ramani
மே 27, 2025 06:39

அடிமையாக இருக்க உங்களுக்கு மட்டும் தான் உரிமையிருக்கிறதா?


Kjp
மே 27, 2025 06:34

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது எதற்காக துரை அவர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை