உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலுக்கும் ஜி.எஸ்.டி.,யா?

கோவிலுக்கும் ஜி.எஸ்.டி.,யா?

'கோவில் வருமானத்திற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என்பதற்கு, தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கட்சி மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த, புறநகர் பகுதிகளில் உள்ள கிராம காங்கிரஸ் கமிட்டி மற்றும் வார்டு கமிட்டிகளை சீரமைக்க, சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு எடுத்த நடவடிக்கை காரணமாக, இதுவரை 7,400 கமிட்டிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகளை, ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கோவில் வருமானத்தில், 18 சதவீதம், சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். பிரசாதம், தரிசன கட்டணம், தங்கும் விடுதி போன்றவற்றை, ஜி.எஸ்.டி., விதிப்பின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., மற்றும் அதற்கான அபராதம் என, ஒவ்வொரு கோவிலும், பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
மார் 17, 2025 09:48

இந்த வரி பக்தர்களுக்கு மேலும் சுமை .. இதை கோயில் பக்தர்களிடம் வசூலிக்கும்


Oru Indiyan
மார் 17, 2025 09:08

இப்போது தான் கூகுளை தேடிய போது, காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ் ஒரு வாரம் முன்பு இந்த செய்தியை பகிர்ந்து வழக்கம் போல் பாரதிய ஜனதா கட்சியை திட்டினார். பாரதீய ஜனதா சரியான பதிலும் கொடுத்து விட்டது.


vbs manian
மார் 17, 2025 08:55

இந்து சமய அறநிலைய துரையின் தவறான தாக்கம்.


Oru Indiyan
மார் 17, 2025 08:05

ஜி எஸ் டீ மத்திய அரசு மட்டும் தீர்மானிப்பதில்லை. எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து தான் தீர்மானிக்கின்றன. இந்த ஆரம்ப அறிவு கூட இல்லாமல் ஒரு தேசிய கட்சி.


முக்கிய வீடியோ