உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சியா?

முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு ஆர்.எஸ்.டி., திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்று வழிபட எந்த தடையும் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் ஆடு பலி கொடுக்க ராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் 53, என்பவர் முயற்சித்தார். போலீசார் தடுத்தனர். இதைகண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுப்பதாககூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அரசு மறுப்பு

இதை மறுத்துள்ள தமிழக அரசின் சமூக ஊடக சரிபார்ப்பகம், 'இது முற்றிலும் பொய். தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக கோர்ட் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பொய் காரணங்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக' தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜன.12ல் காலை 10:00 மணிக்கு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மலையை அபகரிக்க முயற்சி

இதுகுறித்து அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் 'நாங்கள் ஆடு வெட்டுவோம்' என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் மனதை புண்படுத்துவதோடு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், அவர்களது விளம்பரங்களில் சிக்கந்தர் மலை என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதுமாக சில அமைப்புகள் போட்டி போட்டு செயல்படுகின்றன. எப்படியாவது முருகப்பெருமானின் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றவும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கவும் ஆக்கிரமிக்கவும், ஹிந்து - - முஸ்லிம் மத கலவரத்தை உண்டாக்கவும் மிகப்பெரிய சதி திட்டத்தோடு சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதை தடுப்பது குறித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Mohamed Ishaq
ஜன 12, 2025 11:39

முதலில் அனைவரும் தயவு செய்து ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அந்த மலையை போய் நேரில் பாருங்கள் இந்து அமைப்புகள் இதை டைவர்ட் செய்கிறது அதாவது சிக்கந்தர் மலை என்பது வேறு முருகன் மலை என்பது வேறு இரண்டும் ஒன்று அல்ல வேறு வேறு இடத்தில் அமைந்துள்ளது கொஞ்சமும் இரண்டு மலைக்கும் சம்பந்தம் கிடையாது இன்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இருக்கும் மலையில் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இவ்விரண்டு மலைகளுக்கும் சம்பந்தமே கிடையாது சிக்கந்தர் மலையில் பாதி தூரம் மலை ஏறியவுடன் ஒரு பாதை பிரியும் அந்தப் பாதையில் சென்றால் காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் ஆனால் அங்கே அதிக நபர்கள் அந்த கோயிலுக்கு வருவது கிடையாது முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரும் சிக்கந்தர் பாதுஷா அவர்களின் தர்காவுக்கு தான் அதிக அளவில் வருவார்கள் கும்பிட்டு போவார்கள் மேலும் இங்கே ஆடு சேவல் கோழி முதலியவை அறுத்து சமைப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது இது புதிது அல்ல ஆனால் இப்பொழுதுதான் இது மாதிரி நடப்பது மாதிரி ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள் மேலும் இரவு நேரங்களில் கூட அந்த தர்காவில் தங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இரவில் யாரும் தங்குவது கிடையாது போக்குவரத்தும் அதிக அளவில் இருக்காது தர்காவுக்கு வருகை புரிவது இந்துக்கள் தான் அதிகம் வருகை தருவார்கள் மேலும் சிக்கந்தர் பாதுஷா வரலாறு தெரியாமல் பேசாதீர்கள் முதலில் வரலாறு படியுங்கள் சிக்கந்தர் பாதுஷா அவர்கள் மதுரையை பல ஆண்டுகள் ஆட்சி செய்த அரசர் பாண்டிய மன்னரிடம் போரிட்டு மதுரையை வெற்றி கொண்டு அரசாட்சி செய்தார்கள் அதன் பிறகு பாண்டிய மன்னர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திரும்பவும் அந்நகரை அவர்களிடமே ஒப்புக் கொடுத்து விட்டார்கள் வடநாடுகளைப் போல இங்கும் மதக் கலவரத்தை தூண்டுவதற்காக சில இந்து அமைப்புகள் இதுபோன்று ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் இதை அனைவரும் இணைந்து முறியடிப்போம் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை பாதுகாப்போம்


Subramanian
ஜன 09, 2025 12:25

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் அனைவரும் இணைந்து -மூட மதம் அணைத்தும் முடிகி ஒழிந்திட பாடுபடுவோம். மனிதநேயம் காப்போம். மதமான பேயை விரட்டுவோம்.


Vembu
ஜன 08, 2025 22:49

அது ஸ்ரீ கந்தர் மலை .


அப்பாவி
ஜன 08, 2025 10:42

முருகன் வழிபாடு மௌரிய வம்ச மன்னர் சந்திர குப்தன் காலத்தில் நடைமுறையில் இருந்தது. இஸ்கந்தர் என்பதே மருவி ஸ்கந்தர் ஆகி, தமிழில் கந்தர் என மருவியது. அதற்கு பின்னால் ஸ்கந்தரை சிவனின் மைந்தன் என்று உள்ளிழுத்துக் கொண்டது இந்து மதம். இதுபற்றிய விரிவான கட்டுரை இணையத்தில் உள்ளது.


Barakat Ali
ஜன 08, 2025 10:15

சிறுபான்மையினராக இருக்கும் நிலையிலேயே நீங்கள்லாம் இப்படி இருக்கீங்க, உங்கள் மக்கள் தொகை ஐம்பது சதவிகிதம் ஆகிவிட்டால் நாங்கள் இங்கே உயிர் வாழ முடியுமா என்று இதைச் சுட்டிக்காட்டி எனது ஹிந்து நண்பர் கேட்கிறார் ....


Siva Balan
ஜன 08, 2025 10:09

தமிழ்நாட்டில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்களா?


Barakat Ali
ஜன 08, 2025 09:44

பெரும்பான்மையினர் நம்மை கவனிக்கிறார்கள்.. மதமெனப்பிரிந்தது போதும் என்று நாம் கட்டிப்பிடித்தாலும் இனி நம்ப மாட்டார்கள் ....


V.Rajmohan
ஜன 08, 2025 08:11

STPI கட்சி என்பது இத்துக்களை கொலை செய்ய அமைக்கப்பட்ட ஒரு கூலிப்படை அணி. இந்த அமைப்பை NIA தீர விசாரித்து ஒழித்துக்கட்ட வேண்டும்.


Balasubramanian
ஜன 08, 2025 06:42

சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை புரிந்து கொள்வதற்கு முதல்வர் ஒரு மில்லியன் டாலர் (சுமார் எட்டரைக் கோடி ரூபாய்) தருவதாக அறிவித்து உள்ளார்! சங்கத் தமிழ் நூலான பத்துப் பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில் வரும் திருப்பரங்குன்றம் பற்றி தெரிந்து கொள்ள ஐந்து பைசா கூட செலவு இல்லாமல் தமிழ் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்! தேவர் குலமகள் தெய்வானை தனை திருமணம் செய்து கொண்ட முருகனின் ஒரு படை வீடு என்று! திரு முறுகாற்றுப்படை பாடல் வரிகள் முதல் ஐந்து மற்றும் 65 முதல் 75 வரையில் திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்பைக் காணலாம்! சங்க இலக்கியம் தோன்றியது இரண்டாம் நூற்றாண்டில் என்பது என முதல்வருக்கு சொல்லத் தேவையில்லை! பதினாலு நூற்றாண்டு முன்னாள் தோன்றிய ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இதை இன்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்விக்கு முடிவை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நோக்கும் அவரிடமே விட்டு விட வேண்டியதுதான்!


Soundararajan Venkataraman
ஜன 08, 2025 06:41

திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானின் முதலாம் அறுபடை வீடு. பிற மதத்தினர்க்கு அங்கே வேலையே இல்லை . முஸ்லீம்கள் செய்வது அநியாயம். எந்த கட்சியும் சப்போர்ட் செய்யாது.


சமீபத்திய செய்தி