உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை மீறியது விளம்பர மோகம்; குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்டார் யூடியூபர்!

எல்லை மீறியது விளம்பர மோகம்; குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்டார் யூடியூபர்!

சென்னை: தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கினார். தமிழகத்தில் உள்ள பிரபல யூடியூபர்களில் ஒருவர் இர்பான். இவர் உணவகங்களில் ரிவியூ வீடியோ போட்டு பிரபலம் ஆனவர். வெவ்வெறு அரசியல் கட்சி பிரபலங்களுடனும் தொடர்பில் இருப்பவர்.இவர், தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தையின் பாலினத்தை வெளியிடுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் சூழலில், அதனை மீறி இர்பான் தனது பாலினத்தை வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறையின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, யூடியூபில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குவதுடன், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.அப்போதைக்கு தலையை ஆட்டி விட்டு வந்த இர்பான், மன்னிப்பு கோரும் வீடியோ எதுவும் வெளியிடவில்லை. பாலினம் அறிவித்த வீடியோவை மட்டும் நீக்கி விட்டு அமைதியாகி விட்டார். அரசு தரப்பிலும் அதை கண்டுகொள்ளவில்லை.இந்த விவகாரம் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' அந்த வீடியோவை நானும் பார்த்தேன். குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே அதனை வெட்ட வேண்டும். ஆபரேசன் தியேட்டருக்குள் இர்பான் மற்றும் கேமராமேன் என எத்தனை பேர் சென்றார்கள் என தெரியவில்லை. இதனால், நோய் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். விளம்பரத்திற்காக மருத்துவமனை நிர்வாகம் இப்படி செய்துள்ளது என நினைக்கிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' எனக் கூறினார். பாலினம் அறிவித்த தவறுக்கு மன்னிப்பு கேட்காதது பற்றியும் இர்பானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

KRISHNAN R
அக் 22, 2024 10:07

நல்லா பாருங்க... கண் துடைப்பு


siraj
அக் 21, 2024 20:43

இவன் தப்பு பண்ணினால் இவனை மட்டும் திட்டுங்க... மதம் இப்படி செய்ய சொல்லல... தனி மனித தவறுக்காக எந்த மதத்தையும் வெறுக்கும்படியான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் நண்பா...


Ramesh Sargam
அக் 21, 2024 20:01

பயித்தியங்கள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டனர் . ஏதோ ஒரு சிறு விளம்பரத்திற்க்காக ஏதோ பைத்தியக்காரத்தனமாக செய்கின்றனர். அந்த பயித்தியங்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும் பயித்தியங்களை என்ன செய்வது?


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 18:37

Youtube பார்வைகள் எத்தனை யோ அதற்கேற்ப பணம் கிடைக்கிறது. இன்னொன்று தன்மானம், சுயமரியாதை எதுவும் இல்லாத வெட்டிப் பசங்க தமிழ் நாட்டில் ஏராளம். அவங்க பார்க்கிறார்கள். பணத்துக்காக குடும்ப நிர்வாண வீடியோ கூட போடக்கூடும். பாக்கறதுக்கு ஆள் இருந்தா பணம். பணம் குடுத்தால் காட்டறதுக்கா இவனுங்களுக்கு தயக்கம்??? மானங்கெட்ட ஜந்து.


Sankar Ramu
அக் 21, 2024 18:29

இந்த இஸ்லாமிய பெயரை வச்சிகிட்டு எது செய்தாலும் தூங்கா முதல்வர் கண்டுக்க மாட்டார். இதையே ஒரு இந்து செய்திருந்தா குண்டர் சட்டம்தான். அப்புறம் கோர்ட்ல செருப்படிதான் ?


ديفيد رافائيل
அக் 21, 2024 17:23

மானங்கெட்ட Irfan. பணம் சம்பாதிக்க மனித கழிவுகளை சாப்பிடுற மாதிரியான video போடுவான் போல. இவனை follow பண்ணும் மானங்கெட்ட subscribers and viewers


ஸ்ரீ
அக் 21, 2024 17:07

OC சோறு தின்னு திமிர் பிடித்து அலையுது....உழைத்து சாப்பிட்டா கஷ்ட நஷ்டம் தெரியும் நாய்க்கு


Raj
அக் 21, 2024 16:49

இவன் ஒரு யூடுப் பைத்தியக்காரன், இவனது சேனலை யாரும் சப்போர்ட் செய்யாதீர்கள்.


Bahurudeen Ali Ahamed
அக் 21, 2024 16:11

எல்லா மதத்திலும் சில பயித்தியக்காரர்கள் இருக்கிறார்கள், அந்த பயித்தியக்காரய்ங்க செயலுக்கு மதத்தை ஏன் இழுக்கிறீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 22:01

நீங்கள் அனைத்து மத்தத்தினரையும் சமபார்வையில் பார்க்கிறீரா ?? காஃபிர்களுக்கும் சுவனம் கிடைக்குமா ??


Sudha
அக் 21, 2024 16:06

இவனோட எல்லா விடியோசையும் நீக்குங்க போய் ஒடம்பு வளச்சு வேலை செய்து புழைக்கட்டும். யூடுபேர்னு பட்ட பெயர் வேறு,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை