உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த்ரிஷாவுக்கு திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி!

த்ரிஷாவுக்கு திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி!

சென்னை:திருமணம் என பரவிய வதந்திக்கு, நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு திரை யுலகில், 'நம்பர் 1' நடிகையாக இருப்பவர் த்ரிஷா. 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக மட்டுமே நடித்து வருகிறார். த்ரிஷாவுக்கு தற்போது, 42 வயதாகி விட்டது. இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். தொழில் அதிபர் வருண் மணியனுடன், 2015ம் ஆண்டு, அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது; பின், அது ரத்து செய்யப்பட்டது. அதன்பின், திருமண விருப்பமின்றி தனியாக வாழ்ந்து வருகிறார். காதல், திருமணம் போன்ற கிசுகிசுவில் சிக்கிய த்ரிஷா, சமீப காலமாக உச்ச நடிகரும், அரசியல் களம் புகுந்த நடிகருடனும் இணைத்து பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று த்ரிஷாவுக்கும், பஞ்சாப் மாநிலம், சண்டி கரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் என்ற தகவல் பரவியது. இரு வீட்டார் சம்மதத் துடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என, த்ரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, த்ரிஷா தன் சமூக வலைதள பக்கத்தில், 'என் வாழ்க்கையை பற்றி, மக்கள் முடிவெடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே தேனிலவு செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது' என, கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
அக் 11, 2025 19:26

திருமணம் என்றால் திரிஷாவுக்கு தேன்நிலவு ஞாபகம் வருகிறது.


baala
அக் 11, 2025 11:24

தலைவி வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை