உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படகுகளில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர் கருவி; ஆழ்கடலில் இருந்து அவசர செய்தி அனுப்பலாம்

படகுகளில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர் கருவி; ஆழ்கடலில் இருந்து அவசர செய்தி அனுப்பலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி லாஞ்சியடி மீனவ கிராம விசைப்படகுகளில், மீன்பிடி தொழிலின் போது தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ளும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கிய, 'டிரான்ஸ்பாண்டர்' கருவி பொருத்தும் பணி நடக்கிறது.

இதுகுறித்து, மரைன் போலீசார் கூறியதாவது:

மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்த, மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்களால் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். புளூ டூத் வாயிலாகவும் இணைத்து, மொபைல் போன் செயலியாலும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.மேலும், டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் மீன்பிடி படகுகள் இருக்கும் போது, ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோல், கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். அதுமட்டுமின்றி, அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவற்றை குறித்தும் படகிற்கு செய்தி அனுப்ப இயலும்.ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து, ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
டிச 29, 2024 09:13

ஒட்டுமொத்தத்தில் இயற்கையை சூறையாடுவதும்


ஆரூர் ரங்
டிச 29, 2024 09:21

இறப்பு கூட இயற்கையே. மக்கள் ஏன் மருத்துவ சிகிச்சைக்கு போய் வாழ்நாளை நீட்டிக்க முயற்சிக்கிறார்கள்?


கட்டத்தேவன்,,திருச்சுழி
டிச 29, 2024 19:49

இதை தங்கள் படகுகளில் பொருத்த தமிழக மீனவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் ஏன் என்றால் எல்லைதாண்டி மீன் பிடிக்க முடியாது மேலும் கடத்தலில் ஈடுபட முடியாது என்பதால் இதை விரும்ப மாட்டார்கள் அப்படியே கட்டாயப் படுத்தினாலும் சும்மா பெயருக்கு மாட்டி விட்டு அதை வீணாக்கி விடுவார்கள்.


Kasimani Baskaran
டிச 29, 2024 08:22

அதாவது போதைப்பொருள் கடத்தினால் அரசுக்கு தெரியும் என்ற நிலை...


N.Purushothaman
டிச 29, 2024 08:10

பொருத்துவதோடு மட்டும் நில்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை பரிசோதித்து அதன் இயக்கத்தை சரிபார்க்க வேண்டும் ...


சுந்தர்
டிச 29, 2024 08:03

முதல்ல எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நிறுத்த இக்கருவி உதவ வேண்டும். கண்ட்ரோல் ரூம் மூலம் திரும்பி வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து மேலாண்மை செய்ய வேண்டும்


Srinivasan K
டிச 29, 2024 09:26

fishermen cross voluntarily with greed everyone knows


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை