உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை; முதல்வர் ஸ்டாலின் கறார்

வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை; முதல்வர் ஸ்டாலின் கறார்

சென்னை: 'வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் கனமழை பாதிப்பு பகுதிகளை மூன்றாவது நாளாக கொளத்தூர் தொகுதியில் வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியின் பணிகள் மக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு உள்ளது. மக்கள் தி.மு.க., அரசை பாராட்டுவதை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர். பாராட்டுகளை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர். மழை வெள்ளத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.

பாராட்டுகள்

இதை அரசியலாக்கி வியாபார பொருளாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மக்கள் பாராட்டும் வகையில் பெருமைப்படும் வகையில் அதிகாரிகள் ஊழியர்கள் பணியாற்றினர். மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டுகள்.சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டுவதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை. வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்துவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பிரியாணி வழங்கினார் ஸ்டாலின்

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து முதல்வர் உணவருந்தினார். தூய்மைப் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி, பொரித்த மீன் மற்றும் சிக்கன் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Matt P
அக் 20, 2024 23:05

துப்புரவு தொழிலாளி அருகில் அமராமல் கொஞ்சம் இடை வெளி விட்டு மைக்கை நடுவில் வைச்சு ....இப்படியும் ஒரு பொழைப்பு.


Matt P
அக் 20, 2024 12:27

மக்கள் தி.மு.க., அரசை பாராட்டுவதை தாங்க முடியாமல் சிலர் விமர்சிக்கின்றனர்-ஸ்டாலின் ...விமரிசிக்கிற சிலரும் மக்கள் தானேப்பா. விமரிசிப்பவர்களும் மக்கள் தான் பாராட்டுபவர்களும் மக்கள் தான். விமர்சனங்களை தஆங்க முடியாதவர்கள் எல்லாம் பதவிகளில் இருந்தால் மக்கள் ஆட்சிக்கு ஆபத்து. துப்புரவு பணியாளர்களுடன் உணவு உண்டார் சரி. அவர்கள் வெஸ்ட் அணிந்து கொண்டு உண்கிறார்கள். அவர்கள் உணவு உண்பதற்கு முன் அதை கழற்ற சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்தாலினும் அதை அணிந்திருக்க வேண்டும். அது தான் நாகரிகம். அது தான் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம உரிமை.


Rajasekar Jayaraman
அக் 17, 2024 21:39

எருமை மாட்டின் மேல் மழைபொழிவதற்கு சமம் இந்த ஆட்சி மீது உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுக்க போவதில்லை .செலவு கணக்கு மட்டும் வரும்.4000 கோடிக்கு கணக்கு மட்டும் வராது.


Ramesh Sargam
அக் 17, 2024 20:00

ஆக இன்றைய வெள்ளநிவாரண போட்டோ சூட் சிறப்பாக நடந்தது. நாளை மீண்டும் வேறு ஒரு இடத்தில் சந்திக்கலாம்.


Duruvesan
அக் 17, 2024 19:45

விடியல் சும்மா ஷாக்கா கீறாரு பா,


rama adhavan
அக் 17, 2024 19:34

தமிழ் தமிழ் என்று எப்போதும் பேசும் இவர்கள் எப்போதும் பான்ட் தான். ஆனால் தமிழ் பண்பாடு ஆன வேட்டி கட்டுவதே இல்லை. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்.


V RAMASWAMY
அக் 17, 2024 19:26

அதென்ன எதற்கெடுத்தாலும், ஆய்வு செய்தார் என்று செய்தி வருகுகிறது, அவரென்ன ரிசர்ச் ஸ்காலரா? பார்வையிட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும். வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க அவசியமில்லை என்பது ஒரு சால்ஜாப்பு போல் தெரிகிறது. யார் எது கேட்டாலும், இப்படி சொல்லிவிட்டு தப்பிக்கலாம்.


subbiah vellaisamy
அக் 17, 2024 19:17

The government should not say this is vain critics. Because, the government is spending money for Drainage project.This project should give benefits to the public as well as government.where it is giving? With out proper planning that the project is being carried out by government,Then , ultimately it gets fail. If you need any idea, please call us .we are ready to give detailed plan to alleviate the issues.


Narayanan Sa
அக் 17, 2024 18:23

வீண் விமர்சனம் யாரும் செய்யவில்லை. மாடல் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி தான் கேட்கிறோம். உதாரணத்துக்கு நீட் தேர்வு ரத்து. ஆக உண்மையை பேசினால் மாடல் அரசுக்கு பிடிக்காது என்பது மக்களுக்கு தெரியும்


Narayanan Sa
அக் 17, 2024 18:19

தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் என்ன ஆயிற்று. அதை பற்றி எந்த பேச்சும் இல்லை. அவர்களுக்கு ஒரு நாள் பிரியாணி கொடுத்தால் போதுமா. அவர்கள் குடும்பம் நடத்த வேண்டாமா. அவர்களுக்கு கூட விடியல் கிடைக்கவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை