உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெய் ஸ்ரீராம்-ஆ? ஜெய் ஜெகநாத்-ஆ?: அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்: அமைச்சர் சிவசங்கர் ஆரம்பித்தார் சர்ச்சை

ஜெய் ஸ்ரீராம்-ஆ? ஜெய் ஜெகநாத்-ஆ?: அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்: அமைச்சர் சிவசங்கர் ஆரம்பித்தார் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரதமரே ஜெய் ஸ்ரீராம் என்பதில் இருந்து ஜெய் ஜெகநாத் என மாறிவிட்டார், ராமரை கைவிட்டுவிட்டார். முதலில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்,' எனக் கூறி அமைச்சர் சிவசங்கர் சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரகுபதி, ''திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான்'' எனப் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக.,வினருக்கு ஏன் திடீரென ராமர் மீது பாசம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்பினார். பின்னர் அமைச்சர் சிவசங்கர், ''ராமருக்கு வரலாறே கிடையாது'' என்றார். சமீபத்தில் அண்ணாமலை கூறுகையில், ''2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்வார்'' என கூறியிருந்தார்.இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவசங்கர், ''நாட்டின் பிரதமர் மோடியே இதுவரை கூறிவந்த ஜெய் ஸ்ரீராம் என்பதை ஜெய் ஜெகநாத் என மாற்றி கூற ஆரம்பித்துவிட்டார். அவரே ராமரை கைவிட்டு கட்சி மாறிவிட்டார். எனவே, முதலில் அண்ணாமலை, அப்டேட் ஆகட்டும்'' என கிண்டலாக கூறினார்.. அமைச்சரின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

அனந்தராமன்
ஆக 09, 2024 10:44

இவனெல்லாம் தலைவன் என்றும் அமைச்சரென்றும் இருப்பது கேவலத்திலும் கேவலம்.


naranam
ஆக 09, 2024 05:01

ஒரு முட்டாளின் உளறல் இது


God yes Godyes
ஆக 09, 2024 02:18

வந்த வேலயை விட்டு பந்தகாநடும் நல்ல மனிதர்.


Balakumar V
ஆக 08, 2024 23:04

தமிழக அமைச்சர் ரகுபதி அவர்களைக் கேட்டு தெளிவு பெறலாம்


R.MURALIKRISHNAN
ஆக 08, 2024 22:00

சிவசங்கருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது.


God yes Godyes
ஆக 08, 2024 21:56

இவர் தான் நல்ல மனித்ர்.


Pandi Muni
ஆக 08, 2024 21:37

இரு பெயர்களும் ராமரையே சேரும் என்பது கூட தெரியாமல் கால கொடுமை தமிழகத்தின் சாபக்கேடு


Sathyanarayanan Sathyasekaren
ஆக 08, 2024 21:06

ஹிந்துக்கள் பங்களாதேஷில் பயங்கரமாக கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கும் போது அதற்காக துரும்பை கூட அசைக்கத இந்த திருட்டு திராவிட கழிசடைகள் தேவையில்லாத திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள் . இவர்களுக்கு ஓட்ட போடும் அறிவாளி ஹிந்துக்கள் திருந்தாதவரை இந்த மாதிரிதான் பேசிக்கொண்டு இருப்பார்கள். பிஜேபி அரசாங்கமும் கட்சியினரும் இந்த கழிசடைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காமல் ஆபத்தில் இருக்கும் வங்காள ஹிந்துக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும்.


Kumaraguru Singaram
ஆக 09, 2024 07:42

விஸ்வகுரு இப்போ கிணற்று தவளை ஆயிடுச்சோ ??


அப்பாவி
ஆக 08, 2024 20:46

நம்ம கிட்டே வாங்க. ஜெய் ஸ்ரீநாத், ஜெய் ஜெகன் ராம். ஜெய் ராம் நாத், ஜெய் ஜெய் நாத் நு நாலு இருக்கு. எதையாவது இடத்துக்கு தகுந்த மாதிரி அவுத்து உடுங்க.


hari
ஆக 09, 2024 06:29

அந்த போலி அப்புசாமியின் பெயர் இப்போது அப்பாவியாம். மண்டையில் இருக்கும் கொண்டை தெரிகிறது அப்பு


vbs manian
ஆக 08, 2024 20:36

மோடி ரா மரை விட்டு விட்டார். பயங்கர உருட்டு.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ