உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யலாம்: வளர்ப்போருக்கு விழிப்புணர்வு குறைவு

 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யலாம்: வளர்ப்போருக்கு விழிப்புணர்வு குறைவு

மதுரை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் வளர்க்கப்பட்டாலும் அவற்றுக்கு இன்சூரன்ஸ் செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்துகின்றன. வங்கிக்கடன் மூலம் வாங்கிய பசு, எருமை, கன்று, காளைகளுக்கும் வங்கிக்கடன் பெறாமல் சுயமுதலீட்டில் வாங்கினாலும் இன்சூரன்ஸ் பெற முடியும். இன்சூரன்ஸ் செய்யப்பட்ட கால்நடைகள் எதிர்பாரா விபத்து அல்லது நோயால் இறக்க நேரிட்டால் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகையோ அல்லது அப்போதைய சந்தை மதிப்போ இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது. மற்ற கால்நடைகளைப் போலவே ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு செய்ய முடியும். தமிழகத்தில் ஒருலட்சம் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டாலும் 13 ஆயிரம் காளைகளுக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்கிறார் கால்நடை டாக்டர் புத்தன். அவர் கூறியதாவது: கால்நடை டாக்டரின் உடல்நலச் சான்று, சந்தை மதிப்புச் சான்று அடிப்படையில் 3 முதல் 8 வயது வரையுள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யலாம். கால்நடைகளுக்கு காதுதோடு (டேக்) அணிவிப்பதற்கு பதிலாக முகவாய் ஸ்கேன் செய்வதன் மூலம் வலியில்லாத கால்நடை அடையாள முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனுடன் கால்நடையின் போட்டோ சமர்ப்பிக்க வேண்டும். மனிதர்களின் கைரேகை போல ஒவ்வொரு காளையின் முகவாயில் உள்ள நுண்ணிய மேடு பள்ளங்கள் தனித்துவமானது. இந்த தொழில்நுட்பம் மூலம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காளை இறந்தால் அதை துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அலைபேசியிலேயே இதை பதிவு செய்யவும் முடியும். ஜல்லிக்கட்டு காளைகளின் தற்போதைய சந்தை மதிப்பில் 5 முதல் 6 சதவீதமாக ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டும். இது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும். எதிர்பாரா விபத்தோ, நோயோ, பாம்புக்கடியால் இறந்தால் அதன் முழு சந்தை மதிப்பை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்று அதற்கு இணையாக வேறொரு காளையை வாங்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி