உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்தலாமா?

தமிழர்கள் கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்தலாமா?

திருப்பூர் : 'தி.மு.க., - எம்.பி., வில்சன், தன்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு உண்மையாக இல்லை. இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தி.மு.க., - எம்.பி., வில்சன், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதை, அவர் மக்கள் நலனுக்காக செய்யவில்லை. அவர் எழுதிய கடிதம், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக வரும் வெளிநாட்டு உதவியை கோருவதாகும். தமிழர்கள் தந்த எம்.பி.,பதவி என்ற அங்கீகாரத்தை, வெட்கமின்றி இவருடைய மத விசுவாசத்துக்கு பயன்படுத்துகிறார். வெளிநாட்டில் பெறப்படும் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது தெரிந்தும், இப்படி கடிதம் எழுதுகிறார்.அரசின் உபயோகத்துக்கு ஹிந்து கோவில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, மற்ற மதத்தின் ஆலய இடங்களை அப்படி அபகரிப்பதில்லையே ஏன்?எம்.பி.,யின் விசுவாசத்துக்கு, இரு காரணங்களில் ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம் மத்திய அரசு, கிறிஸ்துவர்களுக்கு எதிராக இருக்கிறது என்ற தோற்றத்தை அழுத்தமாக பதிவு செய்யும் முயற்சியாகும்.இரண்டாவது, தி.மு.க.,வுக்கு தேர்தலில் செலவு செய்ய, அக்கட்சியினர் வெளிநாட்டில் பதுக்கியுள்ள நிதி, கிறிஸ்துவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் வருவது தடைபடுகிறது என்பது.இதை உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டும். வில்சன் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை. வரும் தேர்தலில், இப்படிப்பட்டவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

N Annamalai
பிப் 13, 2024 21:30

ஒரு முறை கூட கேள்வி கேட்காதவர்கள் அதிகம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் .பேசாதவர்கள் பென்ஷன் வாங்க கூடாது.


Bahurudeen Ali Ahamed
பிப் 13, 2024 19:48

பிஎம் கேர்க்கு கணக்கு காட்டிவிட்டார்களா?


panneer selvam
பிப் 14, 2024 00:35

PM fund is a public chari trust and does not belong to government . No government support . It runs on the public contribution but managed by trust headed by PM and other trustees . It is audited by private auditors to confirm to trust acts. So it is their discretion to decide on fund disbursal. You can not demand .


ஆரூர் ரங்
பிப் 13, 2024 15:47

பிச்சை போட்ட பாதிரிகளுக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்கவேண்டும்ஜார்ஜ் பொன்னையா. ????வில்சன்.


S.F. Nadar
பிப் 13, 2024 13:45

யாருங்க இவரு ?? பார்த்தாலே பயமாயிருக்கு


கலிவரதன்,திருச்சி
பிப் 13, 2024 15:53

பங்குத் தந்தையை பாத்துதான் பயப்படணும் இவரை பார்த்து ஏன் பயப்படுற தப்பு செஞ்சிங்க


அப்துல்வஹாப்,துவரங்குறிச்சி 621314
பிப் 13, 2024 13:27

முதலில் கனோஜ் ஆங்ரே என்று நீ வைத்திருக்கும் பெயர் யாருடையது அவரின் வீரம் என்ன என்பதை அறிந்து உன் கருத்தை பதிவிடு போலித் தமிழா அந்த வீரனின் பெயரை வைத்திருக்க உனக்கு முதலில் அருகதை இருக்கா?


கனோஜ் ஆங்ரே
பிப் 13, 2024 12:01

அது... சரிங்க. நீங்க தமிழருக்கு விஸ்வாசமா இருக்கீங்களா... ன்னு உங்கள கேள்வி கேட்டுகிட்டு.... அடுத்தவனை குறை சொல்லணும். வரலாற்று காலத்திலிருந்ததே தமிழ்நாட்டில் இருந்த மதம் ஆதிசங்கரர் பின்பற்றிய சைவம், இராமானுஜர் பின்பற்றிய வைணவம், அத்துடன் பௌத்தம், சமணம், கௌமாரம். இந்த மதங்கள் மட்டுமே தமிழ்நாட்டு வரலாற்றிலும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்தது.


Svs Yaadum oore
பிப் 13, 2024 13:00

இத்தனை மதங்கள் இருந்ததா?? கீழடியில் மத அடையாளங்கள் இல்லை ...அதனால் தமிழருக்கு மதம் என்பது கிடையாது .... ஆனால் இங்குள்ள சிறுபான்மை எல்லாம் தமிழருங்க ...இதுதான் திராவிட தத்துவம் ...


Rajagopal
பிப் 13, 2024 20:19

ஆமா இல்ல? தமிலருங்க எல்லாரும் அப்பவே கம்யுனிஸ்டுங்க. கடவுள்லாம் கெடயாது. சாராயம் குடிச்சி, ஆடு, கெடாவெல்லாம் வெட்டி, வேப்பிலை கட்டி வாழ்ந்தாங்க. எல்லாரும் ஒண்ணா உக்காந்துக்கிட்டு தின்னாங்க. அப்பால சாராயம் குடிச்சாங்க. சமத்துவமான ஒரே தெருவுல பொரண்டுகிட்டு உருண்டாங்ய. இஸ்டத்துக்கு எங்கிட்டு வேணாலும் துப்பினாங்ய. மோண்டாங்ய. பேண்டாங்ய. அது மாதிரி இருந்தவங்கள இந்த இந்துப்பயலுவ வந்து குடியக் கெடுத்து, கோயிலுங்களக் கட்டி, சாமி கும்புட வச்சிப்புட்டானுவ. பெரியாருதான் இத மொதல்ல பாத்தாரு. எல்லாரும் போயி இஸ்டத்துக்கு இருங்கடான்னாரு. குளிக்காதன்னாரு. தமிலு பேசாதான்னாரு. நாலுக்கும் மேல குட்டீங்கள வச்சிக்கிடுங்கன்னாரு. அதாண்டா திராவிடம். இப்ப பாரு, முன்னமாதிரியே சாராயம் வெள்ளமா ஓடுது. எல்லாரும் பொரண்டுக்கிட்டு கெடக்கானுவ. தமிலு ஒத்தனுக்கும் சுத்தமா வரல. படிப்பும் வரல. இந்திய ஒலிப்போண்டா. ஹக். ஒலிப்போம். ஒளிப்போம். நீட்டுல்லாம் நமக்காவாது. நீட்டுன்னா நமக்கு எத்தனை வரும்னுதான் தெரியும். இல்லா கம்பி நீட்டத் தெரியும். வேற எதுக்குடா நீட்டு? அந்த மோடி நீட்டு வேணும்னு சொல்லுதாரு. அவரு என்ன எளுதிப்பாத்தாரா? எங்க முதல்வருக்கே படிக்க வராது. அப்ப நாங்க மட்டும் ஏண்டா படிக்கணும்? படிக்கவே வேண்டாம். பட்டம் குடுக்காங்க அறிவாலயத்துல. அத வாங்கி தீம்கால வேல செய்வோம். அப்புடியே எங்க ஊர பெரியாரு சொன்னமாதிரி, சுடுகாடா மாத்திருவோம்.ஹிக்.. இல்ல திராவிட நாடா மாத்துவோம். எதுரா சுடுகாடு? எதுரா திராவிட நாடு? ரெண்டுமே ஒண்ணுதான். அது மனைவி. இது துணைவி. வால்க தமில்


duruvasar
பிப் 13, 2024 10:53

சரியாக கணித்து தக்க சமயத்தில் இவரது முகத்திரையை கிழித்ததற்க்கு நன்றி.


sridhar
பிப் 13, 2024 10:47

தீவிர கிறிஸ்துவர்களுக்கு தங்கள் மதம் தான் ரொம்ப முக்கியம், தேசம் அப்புறம்.


S.F. Nadar
பிப் 13, 2024 13:46

ஒ...அப்படியா நீ எப்படி ?


veeramani
பிப் 13, 2024 09:19

இந்திய அரசில் இன்னும் எவரும் வாழ்க்கை நலத்திற்காக வெளிநாட்டினர் அரசாங்கம் பணத்தை எதிர்பார்க்கவில்லை . வெளிநாட்டின் நிதி உதவி வேண்டவேவேண்டாம். இந்தியாவில் நாங்கள் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். எனவே எந்த கொள்கையில் நேராகநிற்கலாம்.


Svs Yaadum oore
பிப் 13, 2024 09:18

தேர்தலில் செலவு செய்ய, வெளிநாட்டில் பதுக்கியுள்ள நிதி, சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் வருவது தடைபடுகிறதாம் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை