உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களை காரில் துரத்திய கும்பல்; கண்டித்தார் கனிமொழி

பெண்களை காரில் துரத்திய கும்பல்; கண்டித்தார் கனிமொழி

சென்னை: பெண்களை காரில் துரத்தி சென்று அச்சுறுத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர் அவர்கள். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vbs manian
ஜன 31, 2025 11:12

அடிக்கிற மாதிரி அடிக்கணும் ஆனால் வலி தெரியக்கூடாது.


TRUE INDIAN
ஜன 31, 2025 10:12

தென்னை மரத்தில ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து.


rameshkumar natarajan
ஜன 31, 2025 09:56

Because they car was DMK flag, doesnrt mean DMK members. These idiots should have thought, if DMK flag is there police will not catch them. Moreover, these people can belong to other political parties also So, why dont opposition parties publish the name of the card owner which had DMK flag?


sridhar
ஜன 31, 2025 16:26

தமிழிலேயே எழுதலாம் . போகட்டும். கார் பிஜேபி தலைவருக்கு சொந்தமானது என்று வச்சிக்கோ. 200 ரூ ஜீரணம் ஆகும்.


Laddoo
ஜன 31, 2025 09:00

//பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர்//ஞாபகம் வருதே ஞாபகம் வருதே


Ganapathy Subramanian
ஜன 31, 2025 07:02

நீங்க பேசின மீட்டிங்கில் பெண் போலீசாரிடம் கேவலமாக நடந்து கொண்டவர்களை நீங்கள் இப்படி மிகமிக கடுமையாக கண்டித்த பின்னும் திமுக கொடியை கட்டிக்கொண்டு மற்ற கட்சியினர் ஒரு கீழ்த்தனமான நடவடிக்கையில் ஈடுபடுவதை எப்படித்தான் இன்னமும் கடுமையாக கண்டிப்பதோ என்று நீங்கள் ரொம்பவும் வருத்தப்படுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது கட்டுமரத்தின் மகளே.


Mani . V
ஜன 31, 2025 05:52

கட்சி தலைமையிடம் சொல்லிவிட்டு துரத்தி இருந்தால், கட்சியும், காவல்த்துறையும் உதவி செய்திருக்கும் என்று அம்மணி சொல்கிறார்.


xyzabc
ஜன 31, 2025 02:14

விட்டுடு கனி. அவங்க எல்லாம் ஞானசேகர் வுடைய நண்பர்கள். எல்லாம் நம்ப ஆளுங்க.


K.J.P
ஜன 30, 2025 22:28

புல்லரிக்குது.


Ramesh Sargam
ஜன 30, 2025 22:11

நாளை கனிமொழியே முக்காடு அணிந்துகொண்டு சென்றாலும் திமுக கயவர்கள் அவரை அடையாளம் காணாமல் பின்தொடரவாய்ப்புள்ளது. கனிமொழி அக்கா கண்டித்தாராம். அப்படியே அக்காவின் கண்டிப்புக்கு அவர்கள் செவிசாய்ப்பது போல.. யார் அந்த காரில் வந்தவர்கள்? எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? என்கிற விவரங்களையும் வெளியிடவேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 30, 2025 22:09

அடின்னா அடி இப்படித்தான் அடிமேல அடியா மயிலிறகால அடிக்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை