பீஹாரில் நீதி வெல்ல கனிமொழி விருப்பம்
துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே சோரீஸ்புரத்தில், மாநில பேரிடர் நிவாரண நிதியில், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணிகளுக்கு தி.மு.க., -- எம்.பி., கனிமொழி நேற்று அடிக்கல் நாட்டினார். பின், அவர் அளித்த பேட்டி: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் தமிழகத்தில் ஏற்படக் கூடாது. இதற்காக, முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வினருக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளார். ஏனென்றால், பல இடங்களில், லட்சக்கணக்கான மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பீஹார் தேர்தலில் நீதி வெல்ல வேண்டும்; ஜனநாயகம் வெல்ல வேண்டும். இதுதான், நான் உட்பட அனைவரின் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.