உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்த்தி எம்.பி.,க்கு மீண்டும் சீட் வழங்கக்கூடாது: சிவகங்கையில் காங்., நிர்வாகிகள் போர்க்கொடி

கார்த்தி எம்.பி.,க்கு மீண்டும் சீட் வழங்கக்கூடாது: சிவகங்கையில் காங்., நிர்வாகிகள் போர்க்கொடி

சிவகங்கை: கார்த்தி எம்.பி.,க்கு லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் வழங்கக்கூடாது என சிவகங்கை காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிவகங்கையில் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்தது. தமிழக காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.கூட்டத்தில் காங்., தலைவர் ராகுலை, பிரதமர் ஆக்கிட வேண்டும். ராகுல் பிரதமர் ஆவது நோக்கமல்ல என்று கூறுபவர்களை காங்., கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ராகுலை அவமதிக்கும் விதமாகவும், நரேந்திர மோடியே இந்திய பிரதமர் ஆவதற்கு சிறந்த தகுதியானவர் எனக் கூறி காங்., கட்சிக்கு எதிராக பல சர்ச்சைகளை உருவாக்கும் சிவகங்கை எம்.பி., கார்த்தி மீது காங்., தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் எம்.பி., தேர்தலில் கார்த்திக்கு மீண்டும் போட்டியிட சீட்டு வழங்கக் கூடாது . கட்சியினர் சிவகங்கை எம்.பி., தொகுதி பொறுப்பாளர் அருள்பெத்தையா ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். அவரை நீக்கிவிட்டு சம நீதியுடன் செயல்படும் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அருள் பெத்தையா கூறுகையில் '' சிவகங்கை, மானாமதுரை தொகுதி நிர்வாகிகளை சிவகங்கையில் சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்தினேன். மாவட்ட தலைவர், வட்டாரத்தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய எம்.பி.,கார்த்திக்கு சிவகங்கை தொகுதியில் மீண்டும் சீட்டு வழங்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் கூறுகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை