உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம்: கருத்துத் திணிப்பு ஏற்படுத்த நோக்கம் என்ன; அண்ணாமலை கேள்வி

கரூர் சம்பவம்: கருத்துத் திணிப்பு ஏற்படுத்த நோக்கம் என்ன; அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நிருபர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது. மேலும், தேஜ கூட்டணி உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதல்வர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டில்லி சென்ற முதல்வர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள். நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வரதராஜன்
அக் 02, 2025 08:51

அண்ணாமலை சார் ஒரே ஒரு கேள்வி சனிக்கிழமை 7 மணிக்கு மேலதான் வச்சுக்கலாம் நீங்க இலங்கையில் இருந்தீங்க வந்து பாத்துட்டீங்க சம்பந்தப்பட்டவர் இந்த 41 கொலைக்கு சம்பந்தப்பட்டவர் தான் திருச்சி வழியே சண்டை போட்டாரு அப்புறம் நியாயம் விட்டு திங்கள் வெட்டு ராகுல் காந்தி பேசி முடிச்சப்புறம் உங்க அருமை தலைவர் அமித் ஷா பேசி முடிச்ச அப்புறம் ஒரு தண்ணீரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஒரு உண்மையான நியாயம் தர்மம் தெரிந்த நபரான சனிக்கிழமை இரவு நேற்று கிழமை காலையிலோ ஒரு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் இவர்கள் எல்லாம் பேசி முடிச்சப்புறம் எனக்கு அரசியலில் ஒரு நல்ல ஒரு எனர்ஜி வந்திருக்குன்னு சொல்லி மிஸ்டர் சிஎம் சார் பேசுற அளவுக்கு எங்கிருந்து யார் துணிச்சல் கொடுத்தாங்கன்னு தெரியல அவருக்கு? இதெல்லாம் நீங்க அவரை தான் கேக்கணும் என நீங்க ஒரு நல்ல அதிகாரி அதனால் உங்களுக்கு பதிவு போடறேன்


kamal 00
அக் 02, 2025 09:22

திரும்ப கூட்டம் கூடி அரசியல் பண்ண இடம் குடுக்க கூடாது


vivek
அக் 02, 2025 09:32

ரொம்ப மொக்கை பதிவு


varatharajam
அக் 02, 2025 08:48

மலை சார், பாலாஜி சார் நீங்களாவது நிருபர்கள் சந்திக்கிறீங்க காரணமா இருந்தார் ஒருத்தரு வீட்டுக்கு போனவரு ஏதாவது ஒரு பிரஸ்மீட் கொடுத்திருக்காரா


pmsamy
அக் 02, 2025 05:26

IPL கிரிக்கெட் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது கூட இது போன்ற சம்பவம் நடந்தது. இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிக்காமல் அரசியல் பண்ணுகிறான் அறிவில்லாத அண்ணாமலை


vivek
அக் 02, 2025 05:57

உன் இருநூறு மொக்கை கருத்தை இங்கு போடாதே


பேசும் தமிழன்
அக் 02, 2025 07:25

உனக்கு இருக்கும் மூளைக்கு.. தஞ்சாவூர் கோவில் பக்கத்தில் போய் அமர்ந்து கொள்..


Rajah
அக் 02, 2025 07:25

ஒரு தவறை மறைப்பதற்கு இனொரு தவறோடு ஒப்பிட்டு தப்பித்துக்கொள்ள நினைப்பது முட்டாள்தனம். அண்ணாமலை அவர்களின் கேள்வி சரியானதுதான்.


visu
அக் 02, 2025 08:00

அது கர்நாடகா காங்கிரஸ் அரசு அதை ஏன் கோர்த்து விடுகிறாய்


kamal 00
அக் 02, 2025 09:24

உனக்கு இருக்குற மூளைக்கு ........


Kasimani Baskaran
அக் 02, 2025 04:06

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கும் அளவில் நடித்து நாடகம் போட்டதெல்லாம் ரொம்பவே ஓவர்.. அதையெல்லாம் பார்த்த எவனும் இது இயற்க்கையாக நடந்தது என்று சொல்லவே மாட்டான்..


kamal 00
அக் 02, 2025 09:25

நடித்த படம் பட்டய கிளப்புது


மணிமுருகன்
அக் 01, 2025 23:31

அருமை அங்குள்ள மக்கள் பல தகவல்களை சொல்லி உள்ளார்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை அதனால் நெருக்கடி ஏற்பட்டப் போது அதுவும் அவசர சிகிச்சை வாகனம் பல வந்துள்ளது ஒன்று வந்தப்போதே மக்கள் சிரமப்பட்டுள்ளனர் ரோட்டின் நடுவில் துடுப்பு அப்படி இருக்க அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி காவல் என்ற ஏவல்துறை என்ன செய்தது பல அவசரசிகிச்சை ஊர்தி வரும் ஒரு இடத்தை ஏன் பொதுக்கூட்டத்திற்கு கொடுத்தார்கள் அடுத்து சந்துக்குள் இருந்து ஓடி வந்துள்ளனர் அவர்கள் தான் உள்ளே நுழைந்து அடித்துள்ளார்கள் யாரை அடித்தார்கள் ஒரு பையன் வாயில் குத்தி உள்ளார்கள் பொது கூட்டம் என்கிறப் போது மின்சாரம் பாய்ந்தது என்று அதை நிறுத்தி உள்ளார்கள் அங்கிருந்த பெண்கள் எங்கு போவது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள் இதிலிருந்து வெளியூர் மக்கள் பாதை தெரியாமல் தவித்துள்ளார்கள் இதில் தடியடி நதந்ததும் பலர் ஓடத்துவங்கி உள்ளளர் மின்சாரம் இல்லை வெளிச்சம் இல்லை தமிழகம் முன்னேறி உள்ளதா 60ஆண்டுக்கால திராவிட மாடல் இதுதானா ஒரு பொதுக்கூட்டம் என்கிறப் போது இருத்தரப்பிொனரும் முக்கியமாக நடத்த உரிமை தருபவர்கள் வசதி செய்து தரவேண்டியது அவசியம் செய்யவில்லை நடத்துபவர்கள் இடம் மக்கள் வசதி பாதுகாப்பு உறுதி செய்யவேண்டும் கூட்டம் காட்டுவது பெரிதல்ல அவரகளுக்கு கேடு நிகழாமல் காபடபாற்ற வேண்டியது அவசியம் என்பதை மறக்கக்கூடாது காவு கொடுப்பது கேடுகெட்ட அயரலாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கடடசி திமுகா கூட்டணிக்கு புதிதல்ல நல்லதற்கு இல்லை இது நடந்த சிறிது நேரத்தில் ஊழல் பேர்வழி திருச்சி கமிஷன்மணடி பொய் யா மொழி போயுள்ளார் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளார் அப்படி என்றால் திட்டமிட்ட செயலா தவெகா விற்கு தெரியுமா இதிலிருந்து மக்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியது மனித உயிர் மீது அக்கறை கிடையாது அரசியல் அதுவும் ஊழல்கட்சி திமுகா கூட்டணிக்கு சொந்த நலன்தான் முக்கியம் காசு வாங்கி இப்படி போவோர் கவனத்துடன் இருங்கள் கரூரில் இரட்டைமலை சந்திப்பு பெரிய இடம் தான்


முக்கிய வீடியோ