உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். நேற்று முன்தினம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pfe6fws2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதனை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gokul Krishnan
டிச 18, 2024 21:41

நல்ல சிந்தித்துப் பாருங்கள் இந்த பிரச்சனை மிக முக்கியம் ஆனால் இது வரை ஆளும் கட்சியோ பிரதான எதி்க்கட்சியான அ தி மு கவோ வாய் திறக்க வில்லை


நிக்கோல்தாம்சன்
டிச 18, 2024 20:29

கேரளா மாநில முதல்வரை இதற்காக குற்றவாளி கூண்டில் நிறுத்தினால் மட்டுமே இந்த அசிங்கம் நிற்கும்


Subramaniam Mathivanan
டிச 18, 2024 20:17

தமிழக எல்லை செக் போஸ்ட்களில் தென்னிந்தியர் அல்லாத ராணுவத்தினர் அல்லது ரிடையர் ஆன ராணுவத்தினர் அமர்த்தினால் பிரச்சினை சரியாகும்


Palanisamy Sekar
டிச 18, 2024 19:46

இந்த கழிவுகளை கொட்டுவதற்கு எப்படி அனுமதித்தார்கள். தமிழகத்தை இவர்கள்தான் காப்பாற்றப்போகிறார்களாமே. ஆட்சியா இது கேவலமா இருக்குது போங்க


Sivakumar Subbian
டிச 18, 2024 18:22

ஏன் கேரளா அரசு மீது பல கோடி ரூபாய் தண்டம் விதித்து ஏன் தீர்ப்பு வழங்குவது இல்லை?


G Mahalingam
டிச 18, 2024 18:07

தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விடுகிறார்கள். அதில் திமுகவினருக்கு பங்கு.


Dharmavaan
டிச 18, 2024 19:49

அப்படி செய்பவன் தமிழ் துரோகிகள்


karthik
டிச 18, 2024 17:49

எல்லாம் அண்ணாமலை வந்தால் தான் வேலை நடக்கிறது. மூன்று மாதம் அண்ணாமலை வெளிநாட்டில் இருந்த போது இங்கே நடப்பது ஒன்றுமே வெளியில் தெரியாமல் இருந்தது.


Madras Madra
டிச 18, 2024 18:07

சரியாக சொன்னீர்கள்


சமீபத்திய செய்தி