உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் துவங்கியது நிட் ஷோ கண்காட்சி

திருப்பூரில் துவங்கியது நிட் ஷோ கண்காட்சி

திருப்பூர்:பின்னலாடை உற்பத்தி அதிநவீன இயந்திரங்கள் அணிவகுத்துள்ள, 'நிட் ஷோ - 2025' கண்காட்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது. திருப்பூர், காங்கயம் ரோடு, 'டாப்லைட்' வளாகத்தில், 23வது நிட் ஷோ - 2025' கண்காட்சி நேற்று துவங்கியது. மொத்தம், 2 லட்சம் சதுர அடியில், ஐந்து அரங்குகளில், 450 ஸ்டால்கள் அமைக்கப் பட்டுள்ளன. துவக்க விழாவில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா வரவேற்றார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல், கண்காட்சியை துவக்கி வைத்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில்துறையினர், ஒவ்வொரு ஸ்டால்கலுக்கும் சென்று, புதிதாக காட்சிப்படுத்தியுள்ள, அதிநவீன இயந்திரங்களை பார்வையிட்டு, புதிய தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர். வரும், 10ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை பார்வையிட்ட பின்னலாடை தொழில் துறையினர் கூறுகையில், 'நிட்ஷோ - 2025' கண்காட்சியில், புதிய தொ ழில்நுட்பங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. 'நிட்டிங்' துவங்கி 'பேக்கிங்' வரை, பின்னலாடை தொழிலின் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற அதிநவீன இயந்திரங்கள், இயக்கி பார்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. ' திருப்பூர் தொழில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக, கண்காட்சி பேருதவியாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !