உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடைகாலத்தை சமாளிக்க கிருஷ்ணா நதி நீரை திறக்கணும்; ஆந்திராவிடம் கோரிக்கை வைக்க நீர்வளத்துறை திட்டம்

கோடைகாலத்தை சமாளிக்க கிருஷ்ணா நதி நீரை திறக்கணும்; ஆந்திராவிடம் கோரிக்கை வைக்க நீர்வளத்துறை திட்டம்

சென்னை: கோடையில் சென்னையின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் கிருஷ்ணா நதி நீர் வழங்குமாறு ஆந்திராவை கேட்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடையும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து நீர்த்தேக்கங்களில் தற்போது 79.4 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. பகல் நேர வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த தண்ணீர் அளவு கணிசமாக குறையும்.எனவே சென்னை மக்களுக்கு கோடையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தில், ஏப்ரல் மாதத்தில் தண்ணீர் வழங்கும்படி ஆந்திராவை கேட்க தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஜூலை முதல் அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இரண்டு காலகட்டங்களில் நீர் திறந்து விடப்படும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் சென்னைக்கு 4,000 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்படும். இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணா நீர் பிரதானமாக சேகரிக்கப்படும் பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு தற்போது கிட்டத்தட்ட 86% ஆக உள்ளது. இருப்பினும், கோடை காலம் ஆரம்பித்த பிறகு தண்ணீர் கணிசமாக குறையும். அந்த நேரத்தில் கிருஷ்ணா நதி நீர் வரும் பட்சத்தில் பயனுள்ளதாக இருக்கும்.கிருஷ்ணா நீர் தருவதில் ஆந்திராவுக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் 100 கோடி லிட்டர், வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. கண்டலேறு - பூண்டி இடையிலான தண்ணீர் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறும் பட்சத்தில், தண்ணீர் சிரமமின்றி எளிதில் வந்து சேரும். பராமரிப்பு பணிகளுக்காக கடந்தாண்டு நீர்வளத்துறை 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M R Radha
மார் 14, 2025 13:50

இருக்கும் நீர்நிலைகளை குப்பை கொட்டியும் பிளாட் போட்டும் குடிசைகளையும் போட்டு நாசமாக்கி விட்டாச்சு. தமிழகத்தின் உரிமைகளை கருணாநிதி / துரை முருகனும் வித்துட்டாங்க. இப்ப தண்ணீருக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதான் பாக்கி


Ramesh Sargam
மார் 14, 2025 12:42

கோடைக்காலம் ஆரம்பத்தில் உள்ளது. இப்பவே திமுக அரசு வரப்போகும் தண்ணீர் பிரச்சினையை மனதில்கொண்டு கோடைக்காலத்தில் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வழிவகையை செய்யவேண்டும். எப்பொழுதும் போல மொழிப்பிரச்சினை, ஜாதிப்ரச்சினை, எதிர் கட்சியினரிடம் சண்டை என்று ஏதாவது வேண்டத்தகாத பிரச்சினையில் நாட்டம் காட்டாமல், மக்கள் நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். நான் கூறுவது அந்த திமுக அரசுக்கு கேட்குமா?


sankar
மார் 14, 2025 12:16

வீராணம் வீணாய்ப்போன குழாய்களும் - அதில் சுருட்டிய பணமும் - நினைவுக்கு வருகிறது


M S RAGHUNATHAN
மார் 14, 2025 10:31

ஆக இப்போது ஆந்திர அரசிடம் " தண்ணீர் பிச்சை" கேட்கிறது தமிழகம்.சுய மரியாதையே உன் விலை என்ன ?


Nagarajan D
மார் 14, 2025 09:51

தண்ணீர் வேண்டும் என்று கெஞ்சும் தமிழகம் மழை காலத்தில் வரும் எல்லா தண்ணீரையும் கொண்டுபோய் கடலில் விடுவதை தடுத்து ஒரு அணை கட்டி சேமிக்கவேண்டுமென்று கூட தெரியாத கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது


अप्पावी
மார் 14, 2025 09:39

அந்த வாய்க்கால்.படத்தைப் பாருங்க. கட்டி 30, 40 வருசமாயி புல் முளைச்சி கல்கெல்லாம் பேந்து கெடக்கு. ஒரு பத்து பைசா செகவழிச்சு ரிப்பேர் பப்ணிருப்பீங்களாடா? இதெல்லாம் ஒரு அரசு. இவிங்களுக்கு கீழே ஒரு பொதுப்பணித்துறை நிர்வாகம். தண்டச் செலவு.


अप्पावी
மார் 14, 2025 09:37

மழை கொட்டோ கொட்டுனு கொட்டினாலும் செமித்து வெச்சுக்கத் தெரியாத தத்திகள் கிட்டே நிர்வாகம். அவிங்களை மேலாண்மை செய்ய ஒரு தத்தி அரசாங்கம். ரெண்டு க்ரூப்பும் ஆட்டையப் போட மட்டும் போட்டி போடும்.


अप्पावी
மார் 14, 2025 09:33

தென் மாநிலங்கள் ஒத்துமையாப் போகணும். தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கணும். இல்லேன்னா இந்தி, பா.ஜ நம்மளை அழிச்சிடும்.


vivek
மார் 14, 2025 10:55

இது எதுவுமே நடக்காது...ஆனால் 200 ரூபாயும் டாஸ்மாக் சரக்கும் உனக்கு தடை இல்லாமல் கிடைக்கும் கோவாலா


M R Radha
மார் 14, 2025 13:54

திருட்டு குடும்பம் எல்லா மாநிலங்களிலும் சொத்து சேர்த்து வியாபாரம் நடத்துகிறது. நீயும் 200 ரூவாவுக்காக மாஞ்சி மாஞ்சி கருத்து போடறே, கும்மிடிபூண்டிய தாண்டாத குருடனாக இருக்கிற


முக்கிய வீடியோ