உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தில், பள்ளி மாணவி பலாத்கார சம்பவம் எதிரொலியாக, பயிற்சி முகாம்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில், என்.எஸ்.எஸ்., -- என்.சி.சி., ஸ்கவுட் போன்ற அமைப்புகளை நடத்துகின்றன. அதன் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த, மாநில அமைப்பிடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம், முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள், மாணவியருக்கு பெண் ஆசிரியைகள் மூலமாக பயிற்சி வழங்க வேண்டும்.முகாம்கள் நடத்தும்போது, மாவட்ட கல்வி அலுவலருக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்த முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது.அதே போல, மாணவ, மாணவியர், பெற்றோர் அனுமதியும் எழுத்து பூர்வமாக பெறவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

NAGARAJAN
ஆக 23, 2024 07:37

நீங்கள் பாஜக வை தானே சொல்றீங்க. . உண்மை தான்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 21, 2024 12:34

தண்டனை மட்டும் கடுமை ஆக்கிராதீங்க.. என்ன பண்ணுறது பூரா அரசியல்ல இருக்கிறவனுக தான்.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 10:55

போலி கட்சியையே மக்கள் தேர்ந்தெடுக்கும் போது போலி NCC முகாமுக்கு ஆளும் ஆதரவு இருக்காதா?


நிக்கோல்தாம்சன்
ஆக 21, 2024 08:49

முன்னொரு காலத்தில் டாஸ்மாக் நாட்டில் என்று வரலாறு எழுதும்


VENKATASUBRAMANIAN
ஆக 21, 2024 08:36

அன்பில் மகேஷ் என்ன செய்கிறார். உயர் அதிகாரிகள் இதைப்பற்றி கவலை இல்லாமல் உள்ளார்களா


Anandh R
ஆக 21, 2024 07:58

NCC Commander கேம்ப் நடத்தியவர் போலி ஆசாமி என்று அறிவித்தால் மட்டும் போதுமா? களங்கம் ஏற்படுத்திய நபரை ராணுவ சட்டத்தில் தண்டிக்க பரிந்துரைக்க வேண்டும். பெயில்/ ஜாமீன் என்று இழுத்தடிக்க முடியாமல் போகும்.


raja
ஆக 21, 2024 07:57

துக்லக் ஆட்சியை நியாபகம் படுத்துகிறது இந்த ஒன்கொள் திருட்டு திராவிட மாடல் ஆட்சி...


Svs Yaadum oore
ஆக 21, 2024 07:12

என்னய்யா தமிழக அரசு சாட்டை??....NCC என்பது ராணுவ கட்டுப்பாட்டுடன் நடப்பது ....இந்த பள்ளிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சென்னை NCC கமாண்டர் தகவல் ...எவனோ ரோடில் போறவன் NCC கேம்ப் நடத்துவதாக சொன்னால் உடனே அதற்கு அப்பள்ளி அனுமதி கொடுக்குமா


Svs Yaadum oore
ஆக 21, 2024 07:07

விடியல் ஆட்சியில் ஊரெங்கும் கொலை கொள்ளை பாலியல் குற்றம் ..கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாத விஷயம் எல்லாம் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்குது .....கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் ....போலி NCC கேம்ப் நடத்தி ஏமாற்றியுள்ளார்கள் ....ஒரு பள்ளி போலி NCC காம்ப் நடத்த முடியுமா ??..பள்ளியை நடத்தறவன் போலியாக NCC கேம்ப் நடத்த முடியும் என்றால் எதற்கு மாவட்ட கல்வி அதிகாரி , , கல்வி அமைச்சர் என்று இவர்கள் எல்லாம் எதுக்கு?? ..அரசாங்கமா இது ....படு கேவலமான அரசாங்கம் ....இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் ....தமிழ் நாட்டை வளர்ந்த ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...அந்த அளவுக்கு வளர்ச்சி ....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை