உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமனம்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்து உள்ளார்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த பிரவேஷ் குமார் - சென்னை போலீஸ் வடக்கு கூடுதல் கமிஷனர் ஆகவும்,போலீஸ் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி., லட்சுமி- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆகவும்,சென்னை போலீஸ் வடக்கு கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் - போலீஸ் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி., ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
மார் 20, 2025 20:47

இந்த நாற்காலி மாற்றத்தினால் என்ன நிகழும் என்று எதிர்பார்க்கிறார்கள் ?


புதிய வீடியோ