உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

கரூர்: ரூ.100 கோடி நில மோசடி புகாரில், தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கேரளாவில் கைது செய்தனர். தற்போது அவரை கரூர் சி.பி.சி.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், ‛ தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்' என தெரிவித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7nzw37oj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மனு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில்,நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரை கரூர் சி.பி.சி.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ.பி.எஸ்., கண்டனம்

இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்! இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani . V
ஜூலை 17, 2024 05:40

செந்தில் பாலாஜியின் தம்பியைப் பிடிக்க காவல்துறைக்கு திராணி இல்லை என்று சொல்லி விட முடியாது.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 18:33

பங்காளி கட்சி ஆட்கள் மேல் வழக்கு போடுவதெல்லாம் ஏமாற்று நாடகம். முன்பு சம்பாதித்ததில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டால் திமுக மந்திரியாகக் கூட ஆக்கி விடுவார்கள். அதிமுகவின் முன்னாள் வசூல்ராஜாக்களெல்லாம் ஏற்கனவே திமுகவில் மந்திரிகளாக உள்ளார்களே.


D.Ambujavalli
ஜூலை 16, 2024 16:37

சட்ட மன்றத் தேர்தலில் தோற்றவுடனே 'சமர்த்தாக ' இவர் சக அமைச்சர் செந்தூர் போல திமுகவில் சேர்ந்திருந்தால் அங்கும் நல்ல துறை கிடைத்து அள்ளியிருக்கலாமே அங்கு பிடிபட்டால் கூட சொகுசாக நல்ல பைனாப்பிள் கேசரி சாப்பிட்டுக்கொண்டு இருக்கலாம்


K.n. Dhasarathan
ஜூலை 16, 2024 15:41

ஈ.பி.ஸ். போன்றவர்கள் குற்றவாளிக்கு எதிராக வாயை திறக்காமல் இருந்தால் நல்லது, இன்னும் எத்தனை மோசடிகளோ காவல்துறை இந்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை கைப்பற்றி கடுந்தண்டனை வாங்கி கொடுத்தால்தான் மற்றவர்களுக்கும் பாடம் கிடைக்கும்.


அப்புசாமி
ஜூலை 16, 2024 15:33

நேத்திய மாண்பு மிகுக்கள்.. இன்றைய கைதிகள். நாளைக்கி சட்டம் மூலம் விடுதலையாகி வந்துருவாங்க.


Sck
ஜூலை 16, 2024 14:30

ஒரே சாக்கடையில் உதித்த கொசுக்கள். திமுக, அதிமுக.


MADHAVAN
ஜூலை 16, 2024 13:52

இவன் கொள்ளை யடித்த சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றவேண்டும்,


nv
ஜூலை 16, 2024 13:40

EPS முதல்வராக இருந்த போது இப்படி அமைச்சர்களை கைது செய்து இருக்க வேண்டும்.. தவறவிட்டார்...


RAAJ68
ஜூலை 16, 2024 13:28

தற்போதைய திமுக ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு மாபெரும் ஊழல் வழக்கு என்ன ஆயிற்று. இதையெல்லாம் கேள்வி கேட்காமல் எதிர்க்கட்சிகள் உறக்கத்தில் உள்ளன.


RAAJ68
ஜூலை 16, 2024 13:27

திமுக ஆட்சியில் தற்போதைய திமுக ஆட்சியில் மின் மாற்றி வாங்கியதில் நிறைய கொள்ளை அடித்துள்ளனர். பல ஆயிரம் மின்மாற்றிகள் வாங்கியுள்ளனர். இது மிகப்பெரிய ஊழல். இதற்காக அடுத்தார் போன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இது பற்றிய வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி