பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும்
சென்னை:'பா.ம.க., - அருள்: சேலம் மாநகராட்யில் புதிதாக, 'லே அவுட்' போடுகின்றனர்.அங்கு பொது பயன்பாட்டிற்கு விடப்படும் ஓ.எஸ்.ஆர்., இடங்களை தனியார் ஆக்கிரமிக்கின்றனர். அந்த இடங்களில் பூங்கா அமைத்தால், சேலத்திற்கு, 150 முதல், 200 பூங்காக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்காவிற்கும் ஐந்து லட்சம் ரூபாய் தான் செலவாகும்.அமைச்சர் நேரு: பிளாட் போடும் போது நகராட்சி, மாநகராட்சிக்கு பொது பயன்பாட்டிற்கான இடம் ஒதுக்கப்படுகிறது. அதை தனியார் ஆக்கிரமித்திருந்தால், அவர் எப்பேர்பட்டவராக இருந்தாலும், நிலத்தை மீட்டு கொண்டு வந்து விடலாம்.குறிப்பிட்டு சொன்னால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.