உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகள்: விஜய் கட்சி புதுயோசனை

திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகள்: விஜய் கட்சி புதுயோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர், முதியோர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்,” என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.உலக பட்டினி தினத்தையொட்டி, 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வாயிலாக, அன்னதானம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:எங்கள் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி, அன்னதானம் வழங்கினோம். இன்று ஒருநாள் மட்டும் உணவு கொடுத்தால் போதாதது. விஜய் அறிவுறுத்தல்படி, இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்படும். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுவர்.திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, 1,000 முதல் 1,500 பேர் வரைக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில், 700 பேர் மட்டுமே சாப்பிடுகின்றனர்; உணவு மீதமாகிறது. பாத்திரங்களை கழுவ வேண்டும் என்று கூறி, இரவு 11:00 மணிக்கு குப்பையில் கொட்டுகின்றனர்.அதுபோன்று மீதமாகும் உணவுகளை, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்று, 'பார்சல்' செய்து எடுத்து சென்று ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு வழங்குவர். இதற்காக, திருமண மண்டப மேலாளர்களை தொடர்புகொண்டு, தங்களது மொபைல் போன் எண்களை வழங்கவுள்ளனர். திருமண மண்டப மேலாளர்கள் அழைத்தால், விரைந்து சென்று உணவுகளை சேகரித்து எடுத்து செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Subash BV
மே 31, 2024 18:37

This is a regular practice everywhere to return the balance food to Old homes. Anyway cheap canteens like Karnataka, for breakfast, lunch and dinner. NO NEED TO WORRY. COLLECT THE COLLECTIONS FROM TEMPLES UNDER TN GOVT S MANAGEMENT. YOU CAN SERVE THE POOR WITHOUT PAIN. THINK SERIOUSLY.


ramani
மே 31, 2024 07:21

கோடி கோடியாக சம்பாதிக்கிறயே நீயே அதற்கு செலவு செய்யலாமே. ஏன் இந்த கஞ்சத்தனம். உன் பணம் செலவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறாய்.


venkatasubramanian
மே 29, 2024 18:47

வேண்டாத வேலை ஆரம்ப சூரத்தனம் அரசியல் அக்கப்போர் ஆரம்பம்.


எறும்பு மனிதன்
மே 29, 2024 12:22

VMK ன் எழுச்சி, DMK ன் வீழ்ச்சி. இது உறுதி.


Apposthalan samlin
மே 29, 2024 11:36

என் பொண்ணு கல்யாணத்துக்கு 300 பிரியாணி மிச்சம் இருந்தது அநாதை இல்லத்துக்கு வழங்கி உள்ளோம் ராத்திரி சாப்பாடுக்கு ஆகி விட்டது .


ஆரூர் ரங்
மே 29, 2024 10:54

முன்கூட்டியே முதியவர் அனாதை இல்லங்களுக்கு தெரிவித்தால் அவர்கள் அன்றைய சமையலைத் தவிர்ப்பர்.பெரும்பாலும் மீத உணவு பற்றிய தகவல் இரண்டு மணி அளவில்தான் தெரிவிக்கப்படுகிறது.அத்தனை நேரம்வரை சாப்பிடாமல் இருப்பார்களா? பல நேரங்களில் முதியோர் இல்லங்களுக்கு அவர்களால் உண்ண இயலாத இனிப்பு அல்லது காரசாரமான உணவை அனுப்பி வைத்து விடுகின்றனர். ஆகவே வீணாவதைத் தவிர்க்க விருந்தினர்கள் வருகையை முன்கூட்டியே உறுதி செய்யச் சொல்லி அழைப்பிதழில் குறிப்பிடலாம்.


Lion Drsekar
மே 29, 2024 10:51

தனிப்பட்ட முறையில் இந்த கருத்து இருந்தால் அருமை,. ஆனால் அரசியல் கட்சி என்று வந்தால் முதலில் மீதமாகும் உணவு என்று ஆரம்பிக்கும் பிறகு எல்லா திருமண மண்டபங்களும் மற்ற அரசியல் கட்சிகளால் அடாவடி முறையில் கண்டிப்பாக எப்படி கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்களோ அதே போன்று திருமண மண்டபங்களிலும் உள்ளே குண்டர்கள் புகுவார்கள் . கண்டிப்பாக நடக்கும் . ஒருவர் நல்லது நினைத்து செயல்பட முயற்சி செய்தால் , மற்றவர்கள் அதையே முழுநேர தொழிலாகக் கொள்வார்கள் இதுதான் இன்றைய அரசியல் மாடல். வந்தே மாதரம்


Kanagaraj M
மே 29, 2024 10:51

திமுக அதிமுக கட்சி மாநாட்டில் வீணாக்கப்படும் உணவையும் சேகரித்து கொடுக்கலாம்.


A1Suresh
மே 29, 2024 10:31

உணவு மீதமாவது ஹிந்துக்களின் திருமண மண்டபங்களில் மட்டும் தானா ? சர்ச்சு-மசூதிகளில் உணவு மீதமாவதில்லையா ? அல்லது மாற்று மதத்தினருக்கு தானமளிக்கக் கூடாது என்ற இடைஞ்சலா ?


A1Suresh
மே 29, 2024 10:30

இஸ்கான் மாதிரி உணவினை தயாரித்து வழங்க வக்கில்லை. யாரோ வேற்று மனிதர்கள் தயாரித்து உணவினை தானமளித்து பெயரை தட்டிச் செல்லும் மலிவு பிரசார யுக்தி.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ