உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக தினம் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள். பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் துவங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

A1Suresh
ஏப் 26, 2024 20:17

இவர் படித்த நூல்களிலேயே சிறந்தது எது ? அதன் சாரம் எது ? என்று கேளுங்களேன் ஹிரண்யகசிபு தனது மகன் பிரகலாதனை கேட்ட கேள்வி இதுவே அப்படிக் கேட்டால் இவருடைய மேதாவிலாசம் தெற்றென வெளங்கி வெள்ளாமைக்கு வந்து விடும்


A1Suresh
ஏப் 26, 2024 20:15

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றது புறநானூறு-படிக்காத முதல்வரைப் போலத்தானே மக்களும் படிக்காத பேர்வழிகளாக இருப்பார்கள்


A1Suresh
ஏப் 26, 2024 20:13

ஒரு ஸ்டாம்பின் நான்கின் ஒரு பங்கில் போதை பொருளை ஓட்டி விற்கின்றனராம் சுவையோ, நிறமோ, வாசனையோ இருக்காதாம் இருபத்து நாலு மணி நேரம் தெம்பாக இருக்கலாம் என்கின்றனர் கல்லூரி பள்ளி பப்புகளில் எளிதில் வாய்க்கிறதாம், இதை தடுக்க மனமில்லை பெரிதாக புத்தகம் படிக்கும் சிபாரிசு செய்ய வந்துவிட்டார்


A1Suresh
ஏப் 26, 2024 20:10

புத்தகங்கள் என்ன துண்டுசீட்டுக்களா ?


Nagarajan D
ஏப் 26, 2024 13:20

என்ன புத்தகம்


Kumar Kumzi
ஏப் 26, 2024 12:10

உனது கையில் துண்டுசீட்டு படாதபாடு இருக்கே அந்த வேதனையே போதும் உன்னோட அறிவுரை எங்களுக்கு தேவையில்லை


குமரி
ஏப் 24, 2024 13:25

சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு மாணவர்கள் கையில் கஞ்சா.. புகையுது .தலைவரே


மு. செந்தமிழன்
ஏப் 24, 2024 13:25

உங்கள் கைகளில் துண்டு சீட்டு தவளட்டும்


Azar Mufeen
ஏப் 24, 2024 10:49

அந்த 21ஆம் பக்க புத்தகம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் பிஜேபி உள்பட


SP
ஏப் 24, 2024 10:02

அதையெல்லாம் நீங்கள் கடைபிடித்திருந்தால் இப்படியொரு மட்டமான ஆட்சியை தரமாட்டீர்கள் ஸார்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை