மேலும் செய்திகள்
போதை பொருளை தடுக்க 35 மோப்ப நாய்கள்
6 minutes ago
படகு ஆம்புலன்ஸ் சேவை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
7 minutes ago
பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்
15 minutes ago
சென்னை: ''பால் உற்பத்தியாளர்களுக்கு, 'அனைவருக்கும் கடன் திட்டம்' வாயிலாக, கடன் பெற்று தரப்படும்,'' என, தி.மு.க.,வின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் ஒன்றிய ங்களில் உள்ள விற்பனை மேலாளர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தற்காலிக விற்பனை பிரதிநிதிகளுக்கான, இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் நேற்று துவங்கியது. அதில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது: ஆவின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் பணியாற்றுகிறோம். அதில் ஒரு பகுதியாக, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடக்கின்றன. 'அனைவருக்கும் கடன்' திட்டம் வாயிலாக, அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்கள், ஒரு மாடு வாங்க, 19,500 ரூபாய் கடன் பெற முடியும்; ஒருவர் நான்கு மாடுகள் வாங்க, கடன் பெறலாம். ஓராண்டுக்குள் கடனை செலுத்துவோருக்கு வட்டி கிடையாது. இதேபோல், பால் உற்பத்தியாளர்க ளுக்கு உதவும் வகையில், கடன் பெற்று தர ஆவின் உறுதி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
6 minutes ago
7 minutes ago
15 minutes ago