மேலும் செய்திகள்
யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு முடிவு
3 minutes ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
3 minutes ago
சென்னை: பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்த, கோவையை தொடர்ந்து, மதுரை மற்றும் திருவள்ளூரில், இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. காவல் துறை நுண்ணறிவு பிரிவில், கடந்த ஆண்டு ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னையை தலைமையிடமாக வைத்து துவக்கப்பட்டது. டி.ஐ.ஜி., தலைமையில், நான்கு எஸ்.பி.,க்கள், ஐந்து கூடுதல் எஸ்.பி.,க்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், கோவை, சென்னை மற்றும் மதுரையில் தற்காலிக கட்டடங்களில், இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு போலீசார், கடந்த, 30 ஆண்டுகளாக, கோவை குண்டு வெடிப்பு, ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பயங் கரவாதிகளான, அபு பக்கர் சித்திக், முகமது அலி மற்றும் டைய்லர் ராஜா ஆகியோரை, கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நிரந்தர கட்டடம் கட்ட, இடங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில், மாவட்ட வன அதிகாரிகள் குடியிருப்புக்கு எதிரே உள்ள, காலி இடத்தில், 6 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. சென்னையில், ஏ.டி.எஸ்., பிரிவில், பதிவு செய்யப்படும் வழக்குகள், பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பயங்கரவாதிகளை, அந்த நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக, பாதுகாப்பு தொடர்பான சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்திலும், மதுரையில் அயன்பாப்பாகுடி என்ற பகுதியிலும், இடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 minutes ago
3 minutes ago