உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிகளை மீறி பிரசாரம்: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

விதிகளை மீறி பிரசாரம்: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததால் திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததால் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராமு
ஏப் 09, 2024 08:05

நாலு கோடி பத்துன வழக்கு போடாம அமுக்கத்தான்.


Godfather_Senior
ஏப் 08, 2024 17:32

ரௌடியிசம் செய்யத்தெரியாததால் இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டியுள்ளது எவனாவது திமுக கட்சிக்காரனுக்கு எதிராக இம்மாதிரி நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்பது அதிகாரிகளுக்கே தெரியும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல , எல்லா சட்டங்களும் பாஜகவிற்கு எதிராக பாயுமே தவிர அதிமுக அல்லது திமுக உறுப்பினர்களுக்கு எதிராக இருக்காது இதுதான் சாத்தான் விடியல் அரசின் சாதனை


Vathsan
ஏப் 08, 2024 14:16

அந்த நாற்பது கோடி .... எல்லாம் எலெக்ஷன் பாண்ட் பணம் தான்


Seshaderi
ஏப் 08, 2024 12:40

எதிர்த்து நிற்க தெரியாத வர்கள் கொடுக்கும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு


மேலும் செய்திகள்









புதிய வீடியோ