உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரும்பு அளவும் தவறு செய்யாத பரிசுத்தமானவர் மோடி: ராமதாஸ் புகழாரம்

துரும்பு அளவும் தவறு செய்யாத பரிசுத்தமானவர் மோடி: ராமதாஸ் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''பிரதமர் மோடி துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாதவர்; பரிசுத்தமானவர்'' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புகழ்ந்துள்ளார்.தமிழகத்தில் ஏப்.,19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இன்று உலகத்தில் உள்ள பல வல்லரசு நாட்டு தலைவர்கள் எல்லாம் ஒரு மனிதரை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவர்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி; அற்புதமான தலைவர். 3வது முறையாக அவரை நீங்கள் (மக்கள்) பிரதமராக்க வேண்டும். ஒரு துரும்பு அளவுக்கு கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை; பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணம் மோடிதான். எனவே அவரை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அரசு
ஏப் 10, 2024 08:26

நானோ, என் குடும்பத்தாரோ தேர்தலில் நின்றாலோ, அல்லது ஏதாவது பதவி வகித்தாலோ என்னை முச்சந்தியில் நிற்க வைத்து, சாட்டையால் அடியுங்கள் என்று சொன்னவர் தான் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.


Anantharaman Srinivasan
ஏப் 09, 2024 20:20

மருமகளுக்கு மந்திரி பதவி வேண்டும் ஐயா ஐஸ் வைக்க அதுதான் காரணம்


Anantharaman Srinivasan
ஏப் 09, 2024 20:13

பாமக ராம்தாஸ் என்பதைவிட பச்சைபொய் ராம்தாஸ் என்பதுதான் பொருத்தமான பெயர், தேர்தலுக்கு தேர்தல் மாறிமாறி திமுக அதிமுக வில் பாட்டாளி


venugopal s
ஏப் 09, 2024 18:16

இப்படி விழுந்து விட்டாரே! இதற்கு பெயர் தான் டோட்டல் சரண்டர் என்பதா?


Bellie Nanja Gowder
ஏப் 09, 2024 17:38

பாவ மன்னிப்பு


என்றும் இந்தியன்
ஏப் 09, 2024 17:30

ஐயோ பத்திக்கிச்சே???காங்கிரஸ் திமுக என்று பல கட்சிகளின் ஓலம் மிக மிக நன்றாக கேட்கின்றது


Apposthalan samlin
ஏப் 09, 2024 17:22

முடியல


hari
ஏப் 10, 2024 06:02

வயசான முடியாது..... ஓரமா உக்காருங்க


மேலும் செய்திகள்