உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்: அண்ணாமலையை வீழ்த்த வியூகமா?

கோவையில் ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்: அண்ணாமலையை வீழ்த்த வியூகமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் ஏப்.,12ல் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வரவுள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ராகுல், ஏப்.,12ம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி, கோவையில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர். திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில், கோவை தொகுதியில் திமுக வேட்பாளரே போட்டியிடுகிறார். அப்படியிருக்கையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வேறு மாவட்டத்தை தேர்ந்தெடுக்காமல் கோவையை ஏன் தேர்ந்தெடுத்தனர் என கேள்வி எழுந்துள்ளது. கோவையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது, அந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரும் மாநில தலைவருமான அண்ணாமலையை வீழ்த்த திமுக - காங்., வியூகம் அமைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Azar Mufeen
ஏப் 05, 2024 13:21

கர்நாடகாவில் இருக்கும்போது நான் ப்ரௌட் பி கண்ணடியன் என்பது இது சிங்கம் இல்லை பச்சோந்தி கோவையில் வெல்லப்போவது நாம் தமிழர் கட்சிதான்


ராமகிருஷ்ணன்
ஏப் 05, 2024 10:29

ராகுலின் கோவை பிரசாரம் அண்ணாமலைக்கு அபார வெற்றியை பெற்றுத்தரும். சிறப்பாக நடிகர்தான்


அசோகா
ஏப் 05, 2024 07:35

அப்ப அண்ணாமலையின் வெற்றி உறுதி


வாசகர்
ஏப் 04, 2024 23:55

சிங்கம் அண்ணாமலையின் வெற்றியை உறுதி படுத்த வரும் டெல்லி இளவரசரையும், தமிழக மன்னரையும் வரவேற்கிறோம். ஆரம்பம் ஆகட்டும் உளறல்கள் மற்றும் பிதற்றல்கள்.


venugopal s
ஏப் 04, 2024 23:55

அண்ணாமலையைத் தோற்கடிக்க அவர் வாய் மட்டுமே போதும், வேறு யாரும் வேண்டாம்!


Ramesh Sargam
ஏப் 04, 2024 20:03

எத்தனை குள்ள நரிகள் ஸ்டாலின், ராகுல் , ஒன்று கூடினாலும் அந்த சிங்கத்தை அண்ணாமலையை வீழ்த்த முடியாது


திகழ்ஓவியன்
ஏப் 04, 2024 19:56

அண்ணாமலை எல்லாம் லிஸ்டில் இல்லவே இல்லை எப்படி இருந்தலும் அவர் நாம்தமிழர் விட வோட்டு வாங்க போவதில்லை ,


hari
ஏப் 05, 2024 05:08

கனடாவிலுருந்து உன் கதறளும் முடிய போவதியில்லை....


N S Sankaran
ஏப் 04, 2024 19:23

ராகுல் பிரசங்கமும் தங்கபாலு மொழிபெயர்ப்பும் சேர்ந்துவிட்டால் ஆஹா, aahaa தி மு க வுக்கு டெபாசிட் காலியாவது நிச்சயம்.


Godfather_Senior
ஏப் 04, 2024 18:29

சிங்கத்தை வீழ்த்த குள்ளநரி கூட்டமா ? இரண்டு பப்புகளை இந்தியாவே தாங்காது போகட்டும் விட்டுவிடுங்கள், இனிமேல் இவர்கள் அரசியலுக்கு வராமலிருக்க, திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கு முழு தோல்வியை மக்கள்தான் கொடுக்க வேண்டும்...


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 04, 2024 17:56

உதயநிதி அவர்கள் சொன்னது போல கோவை பொதுக்கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதி கூறுவாரா???காவேரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறிய கர்நாடக அரசை கண்டித்து ராகுல் பேசுவாரா???நாங்கள் கொடுத்த கச்சத்தீவு மீட்கப்படும் என்று கூற முடியுமா??? மீண்டும் மீண்டும் சுயநலத்திற்காக தமிழக மக்களை அடிமையாக்கும் ஸ்டாலினும்,ராகுலும் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது..


மேலும் செய்திகள்







புதிய வீடியோ