உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது

கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் பறிமுதல்: 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இதில் ஈடுபட்ட உத்தமபாளையம் மோகன் 39, மதுரை மகேந்திரனை 33, கைது செய்தனர்.ராமநாதபுரம் நொச்சிஊருணி அருகே புது அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மார்ச் 6ல் திருப்பூரில் உள்ள மகன் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். அதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சத்து 35ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.போலீஸ் தனிப்படையினர் விசாரணையில் மதுரை காளவாசல் மகேந்திரன், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வெள்ளையம்மாள்புரம் மோகனை ஆகியோர் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்துது. அவர்களை கைது செய்த போலீசார் 45 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்