உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

சென்னை: 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே...' என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் முருகவேல் காந்தி. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார். 1967 முதல் பாடல்கள் எழுதி வந்தார். அதில் பெரும்பாலானவை பக்தி பாடல்கள். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலை செல்வி, விஜய லக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவர் எழுதிய பாடல்கள்தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா)நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி )ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா) - அனைத்துப் பாடல்கள்காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)காலம் எனக்கொரு (பௌர்ணமி), வானம் நமது தந்தை (தாகம்)திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)அவர் பெற்ற விருதுகள்கலைமாமணி விருதுகண்ணதாசன் விருது2010- கவிஞர்கள் திருநாள் விருது2021- மகாகவி பாரதியார் விருது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijaya Lakshmi
செப் 05, 2025 22:12

அவரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன். அவர் எழுதிய பாடல்கள் எவ்வளவு அருமையான பாடல்கள். அவர் பாடல்கள் என்றென்றும் மக்கள் மனதில் நின்று அவரை நினைத்துக் கொண்டே இருக்கச் செய்யும்.


theruvasagan
செப் 05, 2025 22:01

மிக அற்புதமான ஆன்மீக பாடல்களை எழுதிய நல்ல கவிஞர். ஓம் சாந்தி.


GUNA SEKARAN
செப் 05, 2025 21:01

மிக அற்புதமான கவிஞர். நல்ல மனிதர். வாழ்க அவர் புகழ்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 05, 2025 20:57

அண்ணாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்....ஓம் சாந்தி சாந்தி சாந்தி.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை