உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உற்பத்தியாளர்கள் அச்சம்

உற்பத்தியாளர்கள் அச்சம்

உற்பத்தியாளர்கள் அச்சம்

அன்னுார் வட்டாரத்தில் உள்ள, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, கடந்த டிச., 18 முதல், ஜன., 10 வரை ஆவினுக்கு சப்ளை செய்த பாலுக்கு, லிட்டருக்கு, 3 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை என்ற வகையில் கணக்கிட்டு அனுப்பப்பட்டுள்ளது.பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'முதல்வர் டிச., 13ல் அறிவித்த போது, பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு வந்துள்ள உத்தரவில், ஊக்கத்தொகை எனக் குறிப்பிடப்பட்டு தொகை அனுப்பி உள்ளனர். ஊக்க தொகையை எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை பட்டியலில், விலை உயர்த்தப்படவில்லை' என, அச்சம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை