உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை

மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ரூ. 20 லட்சத்து 53 ஆயிரத்து 644 காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. நேற்று உண்டியல் எண்ணிக்கை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிரந்தர பொது உண்டியலில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 355 ரூபாயும், தங்கம் 85 கிராம், வெள்ளி 125 கிராமும், தட்டு காணிக்கையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 892 ரூபாயும், அன்னதான உண்டியலில் 61 ஆயிரத்து 417 ரூபாயும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்வாணன், கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் உண்டியல் எண்ணிக்கையை கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை