உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நமக்கு வெற்றி ஒளிவீசும்; நம்பிக்கை தரும்: முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

நமக்கு வெற்றி ஒளிவீசும்; நம்பிக்கை தரும்: முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026 என முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026! புத்தாண்டுத் தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும். தமிழகம் வெல்லட்டும் எனக் கோலமிட்டு திராவிடப்பொங்கல் களைகட்டட்டும். கட்சியினர் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்த ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026. உலக மக்கள் அனைவருமே ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த ஆங்கில புத்தாண்டாக 2026ம் ஆண்டு நிச்சயமாக அமையும். பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய முந்தைய அதிமுக ஆட்சியின் சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்பதற்கே இந்த ஐந்தாண்டுகள் பெரும்பாடு பட்டிருக்கிறோம்; தமிழகத்தை மீட்டிருக்கிறோம்.

ஜனநாயக உரிமை

நம் மீது தமிழகத்தின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.தமிழகத்தின் நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என அனைத்திற்கும் போராடுவது நாம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதும், களத்தில் நின்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளரின் உரிமையைக் காப்பதும் திமுக மட்டும்தான்.

தமிழர் பண்பாடு

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திமுக முன்னிற்கிறது. தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் கீழடியிலும், பொருநையிலும் அருங்காட்சியகம் அமைத்துள்ளோம். பிறக்கின்ற ஆங்கில புத்தாண்டு 2026 - அது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு. இருளில் பிறக்கும் புத்தாண்டை விடியச் செய்யும் உதயசூரியன் போல, தமிழகத்தின் விடியல் வெளிச்சமாக திமுக ஆட்சி தொடர்ந்திடும். அனைவருக்கும் மீண்டும், உங்களில் ஒருவனான என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

xyzabc
டிச 31, 2025 12:57

தீபாவளி வாழ்த்து சொன்னால் எந்த ஒளி வீசும் ?கேடு கெட்ட ஜென்மங்கள்


Nesan
டிச 31, 2025 12:40

அபசகுன வாழ்த்து....


வாய்மையே வெல்லும்
டிச 31, 2025 12:28

இப்படியே பேசிட்டு இரு.. ஒருநாளைக்கு இலங்கையில் மக்கள் புரட்சி செய்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு,


J.V. Iyer
டிச 31, 2025 12:27

இவர் "நாம்" என்று கூறுவது அவரது குடும்பம். "மக்கள்" என்று சொல்வது இவரது குடும்ப மக்கள், மற்றும் இருநூறு ரூவாய்க்கு ஓட்டுப்போடும் அடிமைகள்.


திகழ்ஓவியன்
டிச 31, 2025 11:51

என்ன சார் விடிய விடிய மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டுவிட்டு ஓய்வே இல்லாமல் மீண்டும் களத்துக்கு போறீங்களேனு செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டதற்கு கொஞ்சம்‌ வேகமாகவே... "அதுக்குதானே ஓட்டு போடறாங்க.."னு மக்களுக்கான அரசியலை பேசுபவர் ....


திகழ்ஓவியன்
டிச 31, 2025 11:49

இங்கு மழை வெள்ளம் என்றால் களத்தில் இறங்கி வேலை செய்யும் உதயா எங்கே, இந்த வருட மழையில் மாலையில் தன்னீர் தேங்கினாலும் காலையில் தண்ணீர் வடிந்து போக பம்பரமாய் சுழன்று வேலை வாங்கிய DMK தொண்டர்கள் ஆகவே இவர்கள் தான் மீண்டும் வரணும்


kjpkh
டிச 31, 2025 12:18

எங்க மழை நீர் வடிஞ்சுச்சு பெரிய பெரிய மோட்டார் போட்டு வெளியே எடுத்திருக்கிறீர்கள் அந்த 4000 கோடி ரூபாயை கமிஷன் அடிக்காமல் ஒழுங்காக செலவழித்து இருந்தால் தானாகவே வடிந்திருக்கும் .இவர்களெல்லாம் ஏன் பம்பரமாய் சுழல வேண்டும். திகட்டலான கருத்திற்கு இவர்தான் முதலிடம் பெற்றவர். ஆக இந்த முறை திமுகவுக்கான தேர்தல் அல்ல.


திகழ்ஓவியன்
டிச 31, 2025 12:37

ஏம்பா மோட்டார் போட்டு எடுத்து உங்க வீட்டில் விட்டார்களா இல்லை எங்கு நீர் வாங்குதோ அங்கு மாற்றி அனுப்புகிறார்கள்


xyzabc
டிச 31, 2025 13:01

மத்திய அரசு கொடுத்த பணம் வெள்ளத்திலே போச்சா? இல்ல முதலைகள் தின்று விட்டதா?


அப்பாவி
டிச 31, 2025 11:33

வாங்க.. வாங்க. ஆளாளுக்கு வந்து வாழ்த்திட்டு போங்க. எதுவும் நல்லது நடக்கப் போறதில்ல.


Madras Madra
டிச 31, 2025 11:08

உங்கள் புத்தாண்டு வாழ்த்து அபசகுனமானது தமிழ் புத்தாண்டு தான் நமக்கு புத்தாண்டு


நாஞ்சில் நாடோடி
டிச 31, 2025 11:07

தமிழர் மரபு விழாக்களை தவிர அனைத்து விழாக்களுக்கும் வாழ்ந்து சொல்லுவார் முதல்வர்...


Anand
டிச 31, 2025 10:41

இவரின் அதீத நம்பிக்கையை வைத்து பார்த்தால் ஒருவேளை குவார்ட்டர் விலை ருபாய் ஐம்பதுக்கும் கீழ் குறைப்பதற்கு சான்ஸ் உள்ளதோ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை