| ADDED : ஜன 14, 2024 12:49 AM
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நேற்று முதல்வரை சந்தித்து, மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜனுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.அப்போது சண்முகத்திற்கு, தமிழக அரசின் அம்பேத்கர் விருது வழங்கியதற்காக நன்றி தெரிவித்தனர்.மதுரை மாநகராட்சி துணை மேயரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன் மீது, சமீபத்தில் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். நுாலிழையில் அவர் உயிர் தப்பினார். இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.