உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!

அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!

சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.வைகோ அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். கடந்தாண்டு இதே மே மாதத்தில் கால் இடறி விழுந்ததில் இடதுதோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தார். இந் நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வைகோ தற்போது சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் அடைந்ததாக தெரிகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகோ மருத்துவமனையில் இருப்பதை அறிந்த தொண்டர்கள் கவலை கொண்டு அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

MARUTHU PANDIAR
மே 07, 2025 04:25

டீம்கா மேலயும் கருணாநிதி மேலயும் தூற்றோ தூற்று என்று தூற்றி விட்டு, இனி கூட்டணி எவன் வைப்பான் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போ மானங்கெட்டு மானங்கெட்டு உல்ட்டா அடித்து ............. இப்படி ஒரு பொழைப்பா? இந்தாளின் சிஷியர் நாஞ்சில் சம்பத்தும் அப்புடி தானாம். ஒரு தலைவரை பற்றி கூறும் போது " எனக்கு பிடிக்காதது அவர் பெற்று விட்ட சனியன்கள்" என்று கூறி விட்டு அப்புறம் உல்டா அப்புடீன்னு பேசிக்கறாங்க.


MARUTHU PANDIAR
மே 07, 2025 04:16

பாகிஸ்தானை இந்தியா டீல் பண்ணும் வேலையில் மூக்கை நுழைத்து நாசுக்காக தாக்க வேண்டும் என்று அறிவுரை வேறு பகர்ந்தார். நாடே நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் தேச பக்தர். மமோசஸுக்கு மூச்சு நாட்டின் இறையாண்மையை பற்றியும் பிரிவினையை எதிர்த்தும் வந்த சர்வ உத்தமர். கைப்பணத்தை எல்லாம் இலங்கை தமிழருக்கு கொட்டி கொடுத்த ஆளு. ம்.ம்.ம் நாட்டுக்கு அல்லது நடக்கணும்டா சாமீ. இது போன்ற மாபெரும் நபரை நாடு இழக்கலாமா ?


G Mahalingam
மே 06, 2025 19:47

அரசு மருத்துவமனை ஏழைகளுக்கு மட்டுமே. தரம் கிடையாதா?. ஆகையால் திக திமுக இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


R.P.Anand
மே 06, 2025 17:28

அட போயெண்டஆ


நாஞ்சில் நாடோடி
மே 06, 2025 16:48

தமிழகத்தின் சாபக்கேடு


ramesh
மே 06, 2025 16:31

Oooooo


Anand
மே 06, 2025 16:10

ஏதோ நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது நடந்தால் சரி.


Ramesh Sargam
மே 06, 2025 12:48

ஏதாவது அமலாக்கத்துறை ரைடு வருமோ என்கிற பயத்தில், வைகோ ஒரு சின்ன நாடகம் ஆடுகிறார். அவ்வளவுதான். இது ஒரு ஒத்திகை அவர்களிடருந்து தப்பிக்க, அவ்வளவுதான்.


KRISHNAN R
மே 06, 2025 10:38

ஆ. ஊ..... என்று முதலில் சவுண்ட் விடுவதில் வல்லவர். நல்லவர்...


சுந்தரம் விஸ்வநாதன்
மே 06, 2025 12:18

அரசியல் அசிங்கம். இவரால் இந்திய தமிழர்களுக்கோ இலங்கை தமிழர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. ஆனால் இலங்கை தமிழர்களின் இன்னலை மூலதனமாக்கி செல்வாக்கை வளர்த்துக் கொண்டு பரம்பரைக்கு சொத்து சேர்த்துக்கொண்டார் ,மவனுக்கும் அதே பாதையில் பயணிக்க கற்றுக்கொடுத்தார்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 06, 2025 10:16

ஐயையோ கைவிரல் ஒடஞ்சு போச்சா? அப்போ அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் சூரியனை சின்னத்தை காட்ட விரல்களை விரித்து கையை அசைத்தால் நொண்டி சூரியன்னு மக்கள் நெனச்சுக்குவாங்க. சரி விரலை சேர்த்து காங்கிரசின் கை சின்னத்தை காட்டினால் கை நொண்டி என்று மக்கள் நெனச்சுக்குவாங்க. இப்போ என்ன பண்றது? சொக்கா


புதிய வீடியோ