உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்; சீராய்வு மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்; சீராய்வு மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள்ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு செல்லும் என்றும், மாநிலத்தில் வசிப்பிடம் ரீதியாக எந்த ஒதுக்கீடு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எம்.டி.எம்.எஸ்., டிப்ளமோ போன்ற இடங்கள் 2,294 இருக்கிறது. அந்த வகையில், தமிழக மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அகில இந்திய இடஒதுக்கீட்டில் 1,080 பேர் மருத்துவம் பயில்கிறார்கள். இந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம், தமிழகத்திற்கான 1,207 இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகும். அதுமட்டுமில்லாமல், மாநில உரிமைகள் பாதிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையின் இரு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 3வது சுற்று நடைபெற உள்ளது. இந்த தீர்ப்பினால், இந்த ஆண்டு எந்த பாதிப்பும் இருக்காது. தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநகர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 19:55

மாநில ஒதுக்கீட்டில் அதிகளவு கோட்டாவில் தான் அனுமதிக்க படுகிறார்கள். இந்த பாரபட்சத்தால், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை. மாநில அடிப்படையில் எந்த ஒதுக்கீடும் இருக்க கூடாது. சுப்ரிம் கோர்ட் மிக சரியான தீர்ப்பை அளித்துள்ளது.


Began Dhananjayan
ஜன 30, 2025 16:55

அந்த பெண் வலி உன்னையும், உன் தே. திரவிட ஆட்சியும் நாசமாக்காமல் விடாது


Madras Madra
ஜன 30, 2025 16:55

ஓ மா சு வெளியில் ?


S.kausalya
ஜன 30, 2025 16:54

சாரே, சௌக்கியமா ? ரொம்ப நாளா ஆளையே காணும்


பாலா
ஜன 30, 2025 14:39

யார் அந்தச் சார்?


ஆரூர் ரங்
ஜன 30, 2025 14:24

தேவைக்கதிகமான மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் உருவாகி விட்டதால் தொழில் போட்டி காரணமாக (தேவையற்ற டெஸ்ட், அதிக எண்ணிக்கையில் மருந்துகள் பரிந்துரைப்பு) அறமற்ற வழிகளில் சம்பாதிக்கும் நிலை தெற்கிலுள்ள பல ஊர்களில் ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையுள்ளது. மாநில ஒதுக்கீட்டு கொள்கைகளால் அங்குள்ளவர்கள் மேற்படிப்பு இடம் பெற வாய்ப்பில்லாத நிலை. புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் 60 சதவீதம் மத்திய நிதியுதவியுடன்தான் உருவாகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


GMM
ஜன 30, 2025 14:04

பிறப்பிடம் எப்போதும் ஒருவருக்கு ஒன்று. வசிப்பிடம் வாழ்நாளில் பல இருக்கும். வசிப்பிட அடிப்படையில் என்றால், திராவிட மருத்துவ வியாபாரம் கொடி கட்டி பறக்கும்? வசிப்பிட அடிப்படை கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு சரியே. மாசு என்ன குறை என்று கூறாமல், மாநில உரிமை போகின்றது என்று கூறி, மறு சீராய்வாம். தமிழகம் அனைத்து இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி வருவதால், இட ஒதுக்கீடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும். தமிழகம் மருத்துவம் தொடர்பாக எந்த ஒதுக்கீடும் செய்ய அனுமதி கூடாது. சாதி அடிப்படையில் தமிழக இட ஒதுக்கீடுகள் யில்லை. வாக்கு வங்கி அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு. தமிழகம் பின் பற்றுவது அரசியல் சாசன விரோத நடவடிக்கை.


rama adhavan
ஜன 30, 2025 14:01

இவர் சொல்வது விளங்கவில்லை. வழக்கு எண்ணை சொன்னால் தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.


Kumar Kumzi
ஜன 30, 2025 13:57

இவர் தானே அந்த சாரூ


Sundar R
ஜன 30, 2025 13:48

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி இனிமேல் மருத்துவ மேற்படிப்பை உள்ளூரில் படிக்க முடியாது: அகில இந்திய அளவில், இட ஒதுக்கீட்டு முறையால் மருத்துவப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள, மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவருக்கே உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு முறையால் படித்து தேர்ச்சி பெற்றுள்ள அந்த மருத்துவர், அகில இந்திய அளவில் உள்ள, எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டால் மருத்துவப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள, மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டால் தேர்ச்சி பெற்று வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் போய் இவரது சரியில்லாத உடல்நிலைக்கு வைத்தியம் செய்து கொள்வார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை