உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை

சென்னை: வட சென்னை கொருக்குப்பேட்டை கேகே நகரை சேர்ந்தவர் தனுஷ்(23). தனியார் மருத்துவ கல்லூரியில்3ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மியில் ஆர்வம் கொண்ட இவர், இந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் தந்தையிடம் தனுஷ் 24 ஆயிரம் ரூபாய் கேட்டு உள்ளார். ஆனால், அவர் ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனை வாங்கிக்கொண்டு அவரது அறைக்கு சென்ற இவர், நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை. இது குறித்து போலீசுக்கு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, தனுஷ் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மொபைல் போனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
மே 16, 2024 20:15

ஆளுநர் ரவி பதில் சொல்வாரா? அல்லது அவருக்கு ஜால்ரா தட்டும் அண்ணாமலை நஷ்ட ஈடு கொடுப்பாரா ? ஏன் உங்கள் பாவ கணக்குகளை சேர்த்துக்கொண்டு போகிறீர்கள் ? ஏற்கனவே பண மதிப்பிழப்பு பாவம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் ? அடுத்தவர் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிய ஒரு முன்னாள் முதல்வர் என்ன கதி அடைந்தார் ? பார்த்தும் திருந்த வில்லையெனில் நீங்களே சூனியம் வைத்த நிலைதான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை