உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்

சிறப்பு பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஆன்லைனில் நேற்று துவங்கியது.மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு பிரிவினர், 7.5 சதவீத ஒதுக்கீட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நேரடி கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.மாணவர்கள், 'நீட்' ஹால் டிக்கெட், மதிப்பெண் கார்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக சரி பார்த்துக்கொண்டு வர வேண்டும்.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரத்திற்கு முன், கவுன்சிலிங் மையத்திற்கு மாணவர்கள் வர வேண்டும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

gmm
ஆக 22, 2024 07:45

7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கை. அலோபதி மருத்துவம் சர்வதேச கல்வி. இதில் மிக தகுதி குறைந்தவர் சேர்க்கை கூடாது. யுனானி, தமிழ் சித்த மருத்துவம் படிக்கலாம். அதுவும் சிறந்த மருத்துவம் தான். நர்ஸ் போன்ற துணை படிப்பிற்கு ஏற்கலாம். இட நீங்கும் வரை மருத்துவர் பெயர், கல்லூரி, ஆண்டு, இட ஒதுக்கீடு பிரிவு, சாதி விவரம் பொது மக்களுக்கு தெரியும் படி போர்டு கட்டாயம் வைக்க வேண்டும். நல்ல சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் மற்றொரு பயிற்சி குறைந்த டாக்டர் தவறான சிகிச்சை , ஆலோசனையில் மீண்டும் நோய்வாய் பட்டு மருத்துவ மனையில் சேர்ந்த சம்பவம் உண்டு.


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:05

தகுதியுள்ளோர் தவிர அனைவருக்கும் இட ஒதுக்கீடு. 51% சதவிகிதமாவது தகுதிக்கு ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் தகுதிக்கு மரியாதை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை