உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : விரைவில் எதிர்பாருங்கள் விறுவிறுப்பான முடிவுகள்

தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : விரைவில் எதிர்பாருங்கள் விறுவிறுப்பான முடிவுகள்

எத்தனையோ தேர்தல்களில் எத்தனையோ நிறுவனங்கள் தேர்தல் சர்வேக்களை நடத்தி இருக்கலாம். ஆனால், இம்முறை நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்காக தினமலர் நடத்திய சர்வே பிரமாண்டமானது.சில தொகுதிகளுக்கு மட்டும் சென்று ஓரிருவரை மட்டும் பார்க்காமல், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், அரசு அதிகாரிகள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவது போல் சர்வே எடுத்துள்ளோம்.மொத்தம் நாங்கள் பேசிய வாக்காளர்கள் 86 ஆயிரம் பேர். சென்ற ஊர்கள் 3 ஆயிரம் பஞ்சாயத்துகள், தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள். இவை அனைத்திற்கும் நாங்கள் பல்வேறு குழுக்களாக சென்று வாக்காளர்களிடம் பேசி விபரங்களை சேகரித்துள்ளோம்.வாக்காளர்களின் விருப்பம் என்ன?தி.மு.க., எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்?கூட்டணி இல்லாத அ.தி.மு.க.,விற்கு பலம் இருக்கிறதா?எந்த கட்சிக்கு இரண்டாம் இடம்?அண்ணாமலை கரை சேர்வாரா?மாதம் ரூ.1000 உதவித் தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் திமுக கூட்டணிக்கு ஓட்டுகளை பெற்றுத் தருமா போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டு முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் நாங்களே எதிர்பாராத வகையில் பரபரப்பாக அமைந்துள்ளன. இவற்றின் முழு விபரங்கள் விரைவில் உங்கள் தினமலர் நாளிதழில் தேர்தல் களம் பகுதியில் வெளி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி