செய்திகள் சில வரிகளில்
அரசு போக்குவரத்து பணியாளர் கடன் சங்கத்தில் கடனுக்கான வட்டி, 12.5- சதவீதத்தில் இருந்து, 11.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வரை கடன் மனுக்கள் பெறப்படும். புதிய உறுப்பினர்களுக்கு, 3.50 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்படும் என, சங்கத்தின் செயலர் உமாச்சந்திரன் கூறியுள்ளார்.பாஸ்போர்ட் சேவைக்கான, www.passportindia.gov.inஎன்ற இணையதளத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், நேற்று இரவு 8:00 மணி முதல் வரும் 7ம் தேதி காலை 6:00 மணி வரை செயல்படாது என, பாஸ்போர்ட் சேவா கேந்திரா தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் முன்பதிவுக்கு அனுமதி பெற்றுள்ளோருக்கான மாற்று ஏற்பாடுகளை, இயக்கத்துக்கு பின் இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் 15 பேரை இடமாற்றம் செய்து, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உத்தரவிட்டார்.