உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழக பொதுப்பணித் துறை, தொழில் பழகுனர் வாரியம் ஒத்துழைப்புடன், தமிழகத்தில் பட்டம் பெற்ற, பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் அல்லாத கலைப்பிரிவு பட்டதாரிகளுக்கு, ஓராண்டு பயிற்சி வழங்குகிறது. இதில் சேர, டிச., 31 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறலாம். விபரங்களுக்கு, www.boat---srp.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கத் துறை சார்பில், நீர்வள மேலாண்மையில் சிறந்த மாநிலம், மாவட்டம், உள்ளாட்சி, பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில், தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், நீர் மேலாண்மையில் புதுமையான நடைமுறைகளை செயல்படுத்தும் அனைவரும் பங்கேற்கலாம். டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களை, www.awards.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை