உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறை; அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை

பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறை; அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை

புதுடில்லி : மாம்பழம் போன்ற சில பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறையை உள்நாட்டு ஆய்வகங்களில் மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கேட்டு கொண்டுள்ளது.பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்குதல் என்பது பழங்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை தடுக்கும் ஒரு முறையாகும். இது பழத்தின் தரத்தை பாதிக்காமல் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது.இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது அமெரிக்க துறைமுகங்களில் தங்கள் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறையை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையானது ஏற்றுமதியாளர்களின் செலவுகளை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதையடுத்து இம் முறையை இந்திய ஆய்வகங்களில் மேற்கொள்ள அனுமதிக்குமாறு தற்போது கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவன துணை நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு உள்நாட்டிலேயே கதிர்வீச்சுக்குள்ளாக்கும் நவீன வசதிகள் இந்தியாவில் உள்ளது.தமிழகம் குஜராத் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் இதற்கான வசதிகள் உள்ளன.இந்திய ஆய்வகங்களை அனுமதிப்பதன் வாயிலாக ஏற்றுமதியாளர்களுக்கு உண்டாகும் கூடுதல் வர்த்தக செலவுகளை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஜன 16, 2024 21:12

உ பிஸ் ஐ இது போல பழுக்க வைக்கணும் .....


siva
ஜன 16, 2024 19:17

கதிர்வீச்சு எந்த உரூபத்தில் வந்தாலும் ஆபத்து ,எல்லா மிருகங்களும் இயற்கையுடன் ஒத்து வாழ்கின்றன்ஆனால் இந்த மனிதன் மட்டும் அழிவை நோக்கி


Jayaraman Ramaswamy
ஜன 16, 2024 13:23

கதிர் வீச்சு முறை பழங்களை பழுக்க வைக்க அல்ல.


Seshan Thirumaliruncholai
ஜன 16, 2024 11:06

காயாக ஏற்றுமதி செய்தால் பழங்கள் அழுகும்நிலை தவிர்க்க இயலாதா? செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் உடல் உபாதைகள் உண்டாவதால் மருத்துவ நிறுவனங்கள் பயன் அடையும் ஒரு பக்கம் இழப்பு மற்றயோரு பக்கம் லாபம்.


அப்புசாமி
ஜன 16, 2024 09:02

எதுக்கு? இங்கே கெமிக்கல் போட்டு பழுக்க வெச்சாலே பறிமுதல் செஞ்சுடறாங்களே... கதிர்வீச்சு இன்னும் ஆபத்தானது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2024 08:12

இனி காலைக்கடன் கழிக்கவும் அமெரிக்காவின் அனுமதி வேண்டுமா ???? கதிரியக்கம் மூலம் பழுக்க வைத்த பழங்களை உண்டால் பாதிப்பு இருக்காதா ????


Ramesh Sargam
ஜன 16, 2024 06:20

இந்தியாவின் நேர்மையான கோரிக்கையை அமெரிக்கா consider செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி