உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணை 43வது முறையாக 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vc35253s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட பிரதான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இன்று (ஜூலை 30) மாலை, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு 60 ஆயிரம் அடி நீர் வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்தை பொறுத்து 75 ஆயிரம் முதல் ஒரு கனஅடி நீரை வெளியேற்ற உள்ளனர். 90 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை 71 முறை 100 அடியையும், 43 முறை 120 அடியையும் எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஜூலை 30, 2024 20:43

சரியான இன்னும் பல அணைகள் கட்டப்படாதால் எஞ்சிய உபரி தண்ணீர் வருடாவரும் கடலுக்கு போகிறது பிறகு நாம் தண்ணீருக்கு கை ஏந்தி நிற்கவேண்டிய காலம் வருகிறது வந்து கொண்டிருக்கின்றது இதற்கு முடிவே கிடையாதா எல்லா கட்சிகளும் போசுவதோடு சரி பிறகு செயலில் ஒன்றுமே இல்லை


Dharmavaan
ஜூலை 30, 2024 20:39

பிரச்சனை இல்லாமல் நீர் வந்துவிட்டது காவிரியில்


செந்தில்குமார்
ஜூலை 30, 2024 20:02

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப் பட்டிருந்தால் இந்த உபரி நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பி இருக்கலாம். திராவிடம் தமிழ்நாட்டை பிடித்த சாபக்கேடு.


Narayanan Muthu
ஜூலை 30, 2024 19:31

ஒரு சில நபர்களுக்கு காவிரி நீர் குறித்து அரசியல் பேசும் வாய்ப்பு பறிபோனதால் அவர்களின் மன குரல் " வடை போச்சே "


Raja S
ஜூலை 30, 2024 19:05

இது என்ன அதிசயம், ஆட்சியாளர்கள் முன் சிந்தனை. இருந்து முன்கூட்டியே திறந்து கடைமடை வரை தண்ணீர் செல்ல வழி செய்து இருக்கவேண்டும்.அப்பொழுது சிறந்த தலைவர்கள் அதிகாரிகள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை