உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,000 தடுப்பணை கட்ட நிதி பெற முயற்சி அமைச்சர் துரைமுருகன் உறுதி

1,000 தடுப்பணை கட்ட நிதி பெற முயற்சி அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை:''வரும் நிதியாண்டில், 1,000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:ம.தி.மு.க., - பூமிநாதன்: மதுரை தெற்கு தொகுதியில் உள்ள, கிருதுமால் நதி, அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை அரசு துார் வார முன்வருமா?அமைச்சர் துரைமுருகன்: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிருதுமால் நதியில், மழைக்காலங்களில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். கிருதுமால் நதியை துார் வாரி சீரமைக்க, 7.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; விரைவில் பணி துவக்கப்படும். வாய்க்கால்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன.தி.மு.க., - தளபதி: கனமழையின் போது, மதுரை வடக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செல்லுார் கால்வாயை மேம்படுத்த, கடந்த மாதம், 30ம் தேதி முதல்வர் கள ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் ஒதுக்கினார். நிரந்தரத் தீர்வாக செல்லுார் கால்வாயை துார்வார, 69 கோடி ரூபாய்க்கு, நீர்வளத்துறை மதிப்பீடு தயாரித்து, அதை நிறைவேற்ற வேண்டும்.துரைமுருகன்: முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன்.அ.தி.மு.க., - காமராஜ்: திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை விட, பாசன கால்வாய்கள் மேடாகி வருகின்றன. ஆறுகளில் குறைவாக தண்ணீர் வரும் போது, வாய்க்கால்களில் செல்வதில்லை. இந்த குறையை போக்க, வாய்க்கால்களை துார்வார வேண்டும். தேவையான தடுப்பணைகள் கட்ட வேண்டும்.துரைமுருகன்: இதுவரை, 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். தடுப்பணை கட்டுவதால், ஆண்டு முழுதும் தண்ணீர் தேக்கப்பட்டு, நீராதாரம் கிடைக்கிறது. தி.மு.க., - எழிலரசன்: காஞ்சிபுரம் பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. அதை பரிசீலித்து விஷார் கிராமம் அருகே, தடுப்பணை கட்ட வேண்டும்.துரைமுருகன்: அனைத்து உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை தடுப்பணை கட்ட வேண்டும் என்பது. முதல்வரிடம் நிதி பெற்று, 1,000 தடுப்பணைகள் கட்ட அனுமதி பெற முயற்சிக்கிறேன்.காங்., - செல்வப்பெருந்தகை: கடந்த வாரம் பெய்த மழையால், ஸ்ரீபெரும்புதுார் வரதராஜபுரம் பகுதியில், பல நகர்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் கால்வாய் பணி அரைகுறையாக நடந்துள்ளது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால், வெள்ளம் ஏற்படாத பகுதியாக மாற்ற முடியும். எனக்கு தொகுதியில் நெருக்கடி உள்ளது. வரும் பட்ஜெட்டில், அமைச்சர் இதை நிறைவேற்ற அறிவிப்பு வெளியிடுவார் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். நான் எம்.எல்.ஏ.,வாக இருப்பது, அமைச்சர் கையில்தான் உள்ளது என உத்தரவாதம் அளித்துள்ளேன்.துரைமுருகன்: நீங்கள் கூறியது தெரியும். அதிகாரிகளை அழைத்து பேசி உள்ளேன்; நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

'குடிமராமத்து நல்ல திட்டம்'

''அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டம் நல்ல திட்டம் தான். நான் குறை சொல்ல மாட்டேன்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில், நீர் மேலாண்மையில் புரட்சி செய்வதற்காக, குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றினோம். அனைத்து ஏரிகளும் துார் வாரப்பட்டன. மொத்தம் உள்ள 14,000 ஏரிகளில், 6,000 ஏரிகள் துார் வாரப்பட்டன. மீதமுள்ள 8,000 ஏரிகளை துார் வாரும் நடவடிக்கையை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: குடிமராமத்து திட்டம் நல்ல திட்டம். நான் குறை சொல்ல மாட்டேன். தற்போது ஆர்.ஆர்.ஆர்., என்ற பெயரில் ஏரிகள் புனரமைப்பு திட்டம் வந்துள்ளது. அதில் ஏரிகள் துார் வாரும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

jayvee
டிச 11, 2024 11:12

இவர்களின் தடுப்பணை என்பது ஒரு அடிஉயரத்தில் ஒரு கட்டை சுவர்.. இதையத்தான் அதிமுகவும் செய்தது .. சாலையை பாதாள சாக்கடை மூடிகளை ஒழுங்காக சீர் செய்யத்தெரியாத பொறியாளர்களை வைத்துக்கொண்டு அணைக்கட்டினால் என்னவாகும் ?


Mani . V
டிச 11, 2024 05:46

அத்தனையும் அந்த 16 கோடி பாலம் மாதிரியே தற்கொலை செய்து கொள்ளுமா மிஸ்டர். துரைமுருகன்? 1000X16 = 16000 கோடி. வாவ் சூப்பர் வசூல்


D.Ambujavalli
டிச 11, 2024 05:44

இந்த தூர்வாருதல், தடுப்பணை எல்லாம் கொட்டும் மழைக்காலத்தில்தான்பேசப்படும் ஆகக்கூடி 1000 அணைகளுக்குண்டான கமிஷனுக்கு அடி போட்டாய்விட்டது இருக்கும் ஒன்றேகால் வருஷத்தில் ஆனமட்டும் அள்ளவேண்டாமா


நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 04:53

இறந்து போனவனுக்கு சிலை , அவனின் பேனாவ்க்கு சிலை வைக்கும் நிதியில் முன்னரே நீங்க இதனை செஞ்சுருக்கலாம் அமைச்சரே


புதிய வீடியோ