| ADDED : ஜூலை 23, 2011 12:02 AM
சென்னை : தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமி, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், அவர் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''வயிற்றுப் புண்ணுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்,'' என்றார்.