உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கி சூட்டுக்கு பலியாக்கிய அமைச்சர்

துப்பாக்கி சூட்டுக்கு பலியாக்கிய அமைச்சர்

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் துவங்கிய 28 நாட்களில், ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூடிவிட்டனர். அதன் பின் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., மக்களை துாண்டி விட்டது. திடீரென 100வது நாள் போராட்டம் எனக் கூறி, தற்போது அமைச்சராக இருக்கும் கீதா ஜீவன் தலைமையில் ஊர்வலம் நடத்தினர். ஆனால், ஊர்வலம் முடியும் வரை அவர் அங்கு இருக்கவில்லை; பாதியிலேயே சென்று விட்டார். அதன் பின் தான் துப்பாக்கி சூடு நடந்தது. மக்களை துாண்டிவிட்டு, மக்களை பலியாக்கினார். தூத்துக்குடியில் மக்கள் பலியானதற்கு தி.மு.க.,வே பொறுப்பு.- கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gowrisankar C
ஜன 05, 2025 12:38

உங்கள் கருத்தில் உண்மை இம்மியளவும் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை மாநில முதல்வரே டீவி பார்த்து தான் தெரிந்து கொண்டதாக தெரிகிறது. இது உண்மை எனில் இப்ப இதை சொல்லும் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ?


Yaro Oruvan
ஜன 06, 2025 11:50

அவர் சொன்ன செய்தி உண்மை..


Alagusundram Kulasekaran
ஜன 04, 2025 12:11

மனித உயிர்களை அரசியல் வாதிகள் மதிப்பதில்லை


David DS
ஜன 02, 2025 15:03

முன்னாள் அமைச்சர் சொல்வது முற்றிலும் உண்மை.


Kuttimani
ஜன 01, 2025 19:17

கடம்பூர் ராசு இத ஏன் முன்னாடியே சொல்லல.


gayathri
ஜன 02, 2025 09:30

இவ்வளவு நாளாக யோசனை செய்து உள்ளார்


baala
ஜன 01, 2025 12:32

சுடுவதற்கு பரிந்துரை செய்தது யார்.


Sampath Kumar
ஜன 01, 2025 11:11

தெர்மோகோல் எப்போதும் போல நமத்து போச்சு அம்புட்டு தான்


Ganapathy Subramanian
ஜன 01, 2025 15:37

கடம்பூர் ராஜுவிற்கும் செல்லூர் ராஜுவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் போடும் கருத்துகளையெல்லாம் நாங்கள் படித்து தொலைக்க வேண்டி இருப்பது எங்கள் தலையெழுத்து.


vee srikanth
ஜன 04, 2025 09:36

இரண்டு பேருக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை -


veeramani
ஜன 01, 2025 11:01

இரண்டு கழகங்களும் தென் தமிழ்நாட்டை முன்னேற விடமாட்டீர்கள் தென் தமிழகத்தில் எந்த ஒரு பெரிய தொழில்களும் இல்லை. மும்பையில் சான் பேப்பர் இல், மதுர கார்ட்ஸ், தூத்துக்குடியில் SPIC, ஸ்டெரிலைட், மதுரையில் மதுர கார்ட்ஸ், FENNAR, மற்றும் பல பெரிய தொழிசாலைகள முடிவிலா நடத்தியாயிற்று. மக்களும் இளைஞர்களும் சாப்பாட்டிற்கு வழி தெரியவில்லை. இளைஞர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர் அனுப்ப வேண்டிய கட்டாயம். நாங்கள் வானத்தை பார்த்து உட்கார்ந்து வருகிறோம் . எங்களுக்கு ஒரே கதி கடவுள்.


நிக்கோல்தாம்சன்
ஜன 01, 2025 06:42

சரியாதான் சொல்லியிருக்காரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை