உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களை முறியடித்து விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்: அமைச்சர் ராஜா நம்பிக்கை

திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களை முறியடித்து விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்: அமைச்சர் ராஜா நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளி துறையில் தமிழகம் முன்னேறும்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

எந்த துறையாக இருந்தாலும், அதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழகத்தின் மற்றும் ஒரு அறிவியல் பாய்ச்சல் தான், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, விண்வெளி தொழில் கொள்கை - 2025. இரு ஆண்டுகளுக்கு மேலாக, இதற்கான திட்டமிடல்களும், தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு, ஐ.ஐ.டி., உட்பட உயர் நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன், இக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'அக்னிகுல்' உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழக நிறுவனங்களுடன், இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களை கொண்டு, தமிழகத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மகத்தான முயற்சிக்கான, 'லாஞ்ச் பேட்' ஆக விண்வெளி தொழில் கொள்கை அமைந்துள்ளது. ஆனால், தமிழக நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்க்கட்சிகள், நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல். எந்தவித முதலீடும் செய்யாத அந்நிறுவனத்திற்கும், இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு, இந்த வீனர்கள் கொடுக்கும் பரிசா இது?நம்மை பார்த்து, 'காப்பி' அடித்து, குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது. அது, அடிமைகளின் முதலாளிகளின் நண்பர்களுக்காகவா?அவர்களை விட சிறப்பாக, தமிழகம் ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா?தமிழகத்தை வஞ்சிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளி தொழிலிலும் தமிழகம் முன்னேறும். ராக்கெட் மேலே கிளம்பும் போது, கீழே புகையும் நெருப்பும் வருவதை பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் விண்வெளி தொழில் வளர்ச்சி, ராக்கெட் போல் உயரட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'காப்பி' அடித்ததா குஜராத்?

தமிழக விண்வெளி தொழில் கொள்கைக்கான ஒப்புதலை, நேற்று முன்தினம் தான் தமிழக அமைச்சரவை அளித்துள்ளது. இன்னும் அந்த கொள்கை வெளியிடப்படவே இல்லை. அதற்குள், 'நம்மை பார்த்து காப்பி அடித்து, குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது' என, அமைச்சர் ராஜா கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 2024 ஜூனில் விண்வெளி துறை மாநாட்டை, 'இஸ்ரோ' என்ற, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்தியது. அதில், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்று, விண்வெளி தொழில் கொள்கையை தமிழக அரசு வெளியிட இருப்பதாகவும், இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் பேசினர்.அதன் தொடர்ச்சியாக, அம்மாதம் 29ம் தேதி, மக்களின் பார்வைக்காக, வரைவு தொழில் கொள்கை வெளியிடப்பட்டு, தமிழகத்தில் விண்வெளி தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ள சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.பலரும் அதன் மீது கருத்து, ஆலோசனைகள் தெரிவித்தனர். அதற்கு பிறகு தான், குஜராத் வரைவு கொள்கை வெளியானது. கடந்த வியாழன் அன்று விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த விபரத்தை, அமைச்சர் ராஜா தெரிவித்தார். அன்று தான், குஜராத் அரசும் விண்வெளி தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது.வரைவு கொள்கையில் உள்ள தகவல்களை திரட்டி, சில மாற்றங்கள் செய்து கொள்கையாக வெளியிடலாம். இதை தான், 'காப்பி' என, அமைச்சர் கூறுகிறார். விண்வெளி தொழில் கொள்கை வெளியிட போகும் தகவலை, கடந்த ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Parthasarathy Badrinarayanan
ஏப் 21, 2025 06:18

அங்கும் போய் கொள்ளை அடிக்க திட்டம்?


ஆரூர் ரங்
ஏப் 20, 2025 19:39

50 ஆண்டுகளுக்குப் முன்பே தமிழகத்தைத் தேடிவந்த ஏவுதள வாய்ப்பை ஆந்திராவுக்குத் துரத்திவிட்ட பெருமை திமுக அரசுக்கு உண்டு. அந்த உருப்படாத கட்சியின் தற்போதைய திடீர் விண்வெளி பாசம் மருமகனுக்காகத்தான்.


Balasubramanyan
ஏப் 20, 2025 12:49

Unable to understand this topic.many graduates are waiting or jobs. Industries minister must concentrate on creating more jobs. What we gain from this. Are we so rich. Will industries minister and the company by that party supremo will send persons to space. Are they going after Elan Musk. He says 10000crores in five years. How many foreign investments came to tamilnadu after signing MOU at USA andSpain,Japan.


V Venkatachalam
ஏப் 20, 2025 12:25

நம்ம சப்பான் முதல்வர் அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டிய வீரர் சுடாலின் மருமகன் சபரீசன் பேரில் 2024 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் வழியாக கொள்ளையடிக்க கம்பெனி ரிஜிஸ்டர் பண்ணியிருக்கார்கள், இந்த திருடர்கள்.. ரொம்ப யோக்கியர்கள் மாதிரி இவர்களுக்கு பேச்சு வேற. டிஆர்பி ராஜா அப்பவை விட ஜாஸ்தியா கொள்ளை அடிச்சிருவார்.


RAAJ
ஏப் 20, 2025 11:20

SPACE STATION ஆரம்பிக்கும் அளவுக்கு திமுக குடும்பம் லட்சம் கோடிகளை சுரண்டி உள்ளது. கேடுகெட்ட மத்திய அரசு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.


M Ramachandran
ஏப் 20, 2025 10:07

திருட்டு கும்பல் எது செய்தலும் ஆதாயம் இல்லால் செய்யாது என்பது மக்களுக்கு பழகி போச்சே.


Shekar
ஏப் 20, 2025 09:40

கட்டுமரத்துக்கு போஸ்டர் ஒட்டினோம், அவரோட மகனுக்கு ஒட்டினோம், பேரனுக்கு ஒட்டினோம், இப்போ மகனோட மருமகனுக்கு போஸ்டர் ஒட்டுறோம், அடுத்து கொள்ளுபேரனுக்கு ஓட்டுவோம். ஆஹா கட்டுமரத்துக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக சொரணையற்றவர்கள்


Kasimani Baskaran
ஏப் 20, 2025 08:39

மத்திய அரசின் துறைகளை மாநில அரசு தான்தான் முழு முயற்சியில் உருவாக்கியது போல சாராயம் விற்றுக்கொண்டே உருட்டுவது மிகக்கேவலமான அணுகுமுறை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 08:32

அறிவாலய கொத்தடிமைகளைப் பொறுத்தவரை தமிழகம் முன்னோடி- திமுக ஆட்சியில் மட்டும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 08:30

ஆமா... நீங்க ரொம்ப யோக்கியர் .... இருப்பதும் யோக்கியர்கலின் கட்சியில் .....


முக்கிய வீடியோ