வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசியலில் இருந்து விலகி இயற்கையோடு வாழுங்கள் ரகுபதி அவரகள்
திருச்சி : இதய பாதிப்பு காரண மாக, திருச்சியில் சிகிச்சை பெற்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 74, நேற்று, வீடு திரும்பினார். புதுக்கோட்டையைச் சேர்ந்த ரகுபதி, தமிழக சட்டத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 26ம் காலை, சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தபோது, அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு, இதயத்தில் வலியும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.உடனடியாக, திருச்சி, கன்டோன்மென்ட் பகுதி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறி, ஆஞ்சியோ சிகிச்சை அளித்தனர்.சிகிச்சை முடிந்த அமைச்சர் ரகுபதி, நேற்று புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.
அரசியலில் இருந்து விலகி இயற்கையோடு வாழுங்கள் ரகுபதி அவரகள்