உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதால், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை:மத்திய அரசின் திட்டங்கள் பெயரை, தமிழக அரசின் திட்டங்களுக்கு சூட்டுவதாக திட்டமிட்டு பிரசாரம் செய்கின்றனர். மத்திய அரசு தங்களுடையது என பெருமை கொள்ளும் திட்டங்களுக்கு, தமிழக அரசு பெருமளவு நிதி வழங்குகிறது.பிரதம மந்திரி ஊரக வீடு வழங்கும் திட்டத்தில், ஒரு வீட்டிற்கு 1.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு 72,000 ரூபாய்; மாநில அரசின் பங்கு 48,000 ரூபாய். இதில், வீடு கட்ட முடியாது என்பதால், தமிழக அரசு கூடுதலாக 1.20 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்குகிறது. ஆனால் திட்டத்திற்கு, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' என்று பெயரிட்டு பெருமை கொள்கின்றனர்.நகர்ப்புறத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், மத்திய அரசின் பங்கு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே; மாநில அரசின் பங்கு 7 லட்சம் ரூபாய். பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி, முதல்வரின் கிராம சாலை திட்டம் என்று அறிவித்துள்ளதாக கூறுகின்றனர்.இத்திட்டம் முழுதும் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்திற்கு, 1,945 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன; இன்று வரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதேபோல, ஊட்டச்சத்தை உறுதி செய்ய, மாதிரி பள்ளிகள் திட்டத்தை, மாநில அரசு தன் சொந்த நிதியில் செயல்படுத்துகிறது.மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

பேரிடர் மேலாண்மை

'மிக்ஜாம்' புயலால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இவற்றை சீரமைக்க மத்திய அரசிடம், 19,689 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு, 18,214 கோடி ரூபாய் கோரப்பட்டது. ஆனால், ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை மட்டும், மத்திய அரசு வழங்கியது. பல்வேறு குழுவினர் வந்த போதிலும், இதுவரை எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், பிற மாநிலங்களுக்கு நிதி வழங்கி உள்ளனர். தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதன் காரணமாக, மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.பிரதமர் மோடி துாத்துக்குடிக்கு வர உள்ளார். அதற்கு முன், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறேன்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணி, 63,246 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு, 50 சதவீதம் வழங்க வேண்டும்; இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நமக்கு ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு, நாக்பூர், கொச்சி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியாயமற்ற செயலால், மாநில அரசுக்கு இந்த ஆண்டு 9,000 கோடி ரூபாய், அடுத்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.மத்திய அரசு தன் கடமையை நிறைவேற்றாததால், மாநில அரசின் பற்றாக்குறையும் கடனும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம்.

கூட்டாட்சி தத்துவம்

மத்திய அரசு தன் வரிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என, ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. கடந்த 10வது நிதிக்குழுவில், 6.64 சதவீதமாக இருந்த நம் பங்கு, 15வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாகக் குறைந்துள்ளது; நம் மாநிலத்திற்கு அநீதியை அளிக்கிறது.மேலும், மத்திய அரசு தன் வரிகள் மீது மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை விதிக்கிறது. நியாயமாக பார்த்தால், இத்தொகையை மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, அத்தொகையை வைத்து திட்டங்களை தீட்டுகிறது.ஒருவேளை மத்திய அரசு, கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடித்து, இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், மாநில அரசின் பற்றாக்குறை, கடன் சுமை குறைந்திருக்கும். இது, தமிழகத்தைச் சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை; அனைத்து மாநிலங்களையும் சார்ந்தது. இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும், அடிப்படை புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சியினர், அரசின் கடன் அளவு குறித்து தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு 1.02 லட்சம் கோடி ரூபாய்; மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று வரவு - செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாய்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 31.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நிதிக்குழுவின் வரம்புக்குள் தான் கடன் வாங்கி உள்ளோம். மத்திய அரசு நம் நிதி நிலையை பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால், நம் கடன் இந்த ஆண்டு 26,117 கோடி ரூபாய், அடுத்த ஆண்டு 26,442 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 87 )

Mohan das GANDHI
பிப் 24, 2024 00:43

தென்னரசு தெலுங்கன் தெலுங்கை ஸ்டாலின் வீட்டு கோபாலபுரம் கொத்தடிமை. நேர்மையான PTR ஐ ஸ்டாலின் இலாகா மாற்றியதே கொள்ளையடிக்க வழியில்லாமல் தான் மாற்றிவிட்டார் IT தொழில் தொடர்பு அமைச்சராக ? அங்கு ஒன்றுமே இல்லை கொள்ளையடிக்க எனபதால். தென்னரசு மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு கொடுத்த 1824 ஆயிரம் கோடி ரூபாய் வரி மானியத்தை கொடுத்தது திமுக அரசிடம் எல்லா வருடமும் இது மாறும். ஆனால் அரிசி , பருப்பு தானிய வகைகள் எல்லாம் இலவசமாக டன் கணக்கில் கொடுத்தது எல்லாவற்றயும் BLACK இல் விற்று தென்னரசு கோபாலபுரம் முதலாளியிடம் சேர்த்து நல்ல பெயர் எடுக்கிறானாம் ஏழைகளின் வயிற்றிலடித்து இந்த அரக்கன் தென்னரசு ஊழல் திருடன் அதுபோல இவன் அக்காள் மேக்கப் மோஹினி DMK WASTED MP தமிழச்சி தங்கபாண்டியன்(தெலுங்குகாரி) Photo, TV யில் தெரிவதற்கு வேண்டியே பார்லிமென்ட் செல்கிறான் BLING BLIN TAMIZHACHI THANGA PANDIAYAN NO USE FOR TAMIL PEOPLE ? SHE NEVER BEEN HER CONSTITUTION ????? DMK ALL MINISTERS INCLUDING STALIN AND HIS HAWALA UDHAYANIDHI STALIN ALSO DMK MAFIA MP'S, DMK CROOKS MLA'S DMK COUNSILLORS ALL ARE HIGHLY CORRUPTED AND SPOILED TAMILNADU ECONOMY IS FACT. THIS MP 2024 ELECTION DMK WILL NEVER WIN EVEN THEY EVEN NEVER GET DEPOSIT MONEY TAMIL PEOPLE WHO SUFFERED IN RAINY WATER DMK NEVER BOTHER ABOUT POOR PEOPLE STALIN AND HIS ALL DMK MINISTERS WERE HIDING IN THEIR HOUSES ONLY ? THIS IS AGAINST HUMANITY AND NO RESPONSABILITY OF GOVERNMENT IS DMK FAILURES IS SEEN. ENOUGH IS ENOUGH. DMK GO BACK TO ANDHRA ONGHOL.


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:27

மத்திய அரசின் பணத்தில் மாநில திட்டம்போன்று திமுக செயல்படுத்துகிறது. இதற்கு மத்திய அரசு ஏன் செலவிடவேண்டும்? முழுவதும் நிதியை நிறுத்துங்கள். அலறியடித்துக்கொண்டு ஸ்டாலின் ஓடிவருவார்.


M Ramachandran
பிப் 23, 2024 19:35

இதையெ சொல்லி இனிமேல் மக்களை முட்டாளாக்க முயல வேண்டாம் இப்போ அண்ணாமலையின் தயவால் விவகாரங்கள் தெள்ள தெளிவாகா தெரிய ஆர்ம்பித்து விட்டன


Kuppan
பிப் 23, 2024 16:54

எப்படியாவது ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லாத 500 கும் மேல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு, இப்ப மைய அரசு தரவில்லை என்று உருட்டுவது ஏன், நீங்க சொன்ன முதல் கையெழுத்து, சாராயத்தை இழுத்து மூடி இளம் விதவைகள் எண்ணிக்கை உயராமல் பார்த்துக்குவோம் சொன்னிங்க அதை செய்து இருந்தால் இந்நேரம் தமிழக மக்கள் சோமாலியர்களை விட இன்னும் கீழ் சென்று இருப்போம், அந்த நிலையை கூடிய சீக்கிரம் அடைவோம் நீங்கள் ஆட்சியில் தொடர்ந்தால்.


Kuppan
பிப் 23, 2024 16:35

"சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு கொடு ...சந்தைக்கு போகணும் ...." சப்பாணி மாதிரி இதையே திரும்ப திரும்ப சொன்ன மக்கள் நம்ப மாட்டாங்க உன் திறமை மேலதான் சந்தேகம் வரும், வேணும்னா மத்திய அரசுடன் நேர் அலையில் விவாதம் கூப்பிடுங்கோ, மக்கள் கையில் விடுங்க யாரு மேல தப்புனு, சும்மா பைத்தியம் மாதிரி ஆளுஆளுக்கு இதையே உளறாதிங்க, பணம் இல்லாத பொது எதுக்கு ரூ 500 கோடியில் திரை பட நகரம், ரூ 42 கோடியில் கார் ரேஸ் யாரு கேட்ட மக்கள் போராடினார்களா? எவன் அப்பன் வீட்டு காசை எடுத்து இப்படி விரயம் பண்ணுவீர்கள்.


sankar
பிப் 23, 2024 16:26

"பெட்ரோல் டீசல் டாஸ்மாக் சினிமா கேளிக்கை வரி ரெஜிஸ்திரார் முத்திரை கட்டணம்".... இவைகளும் ஜி எஸ் டி கொண்டுவரப்படவேண்டும்


Kuppan
பிப் 23, 2024 16:22

மத்திய அமைச்சர் நிர்மலா தான் தெளிவா விளக்கி இருக்காங்களே,நாங்க விடியல் மட்டும் தான் தத்தினு நினைத்தோம், இப்பதான் தெரியுது கட்டுல இருக்கிற எல்லா கார்டும் ஜோக்கர்னு.


Kuppan
பிப் 23, 2024 16:19

பிரதம மந்திரி திட்டம் அப்படின்னுதான் பெயர் வைக்கிறார்கள், பிற்காலத்தில் இது எல்லா பிரதமர்களும் சேரும், அனால் நீங்க எல்லா திட்டத்திலும் கலைஞர் கருணாநிதி ... அப்படினு வைக்கிறீங்க, இது யாரு வீட்டு பணம் ?சேவை செய்ய வேண்டியது உங்கள் கடமை, அதற்கு எல்லா திட்டத்திலும் தெரு, ரோடு , சந்து, கட்டிடம் நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் இறந்த கட்டுமரத்தின் பெயர் எதற்கு முதல் அமைச்சர் திட்டம் என்று வயிக்க வேண்டியது தானே?


sankar
பிப் 23, 2024 16:14

"10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு" யானைக்கு அல்வா வாங்கிப்போட்டு கதை உங்களின் நினைவுக்கு வந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பு அல்ல


Dharmavaan
பிப் 23, 2024 16:07

மத்திய அரசு வரி வசூலிக்க உரிமை உள்ளதா இல்லையா இதை மாநில அரசுடன் ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்