மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 1
''முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் கூட பார்க்க முடிவதில்லை,'' என, பழனிசாமி பேசிஉள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில், கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை விலக்க வலியுறுத்துவது தான். அதன் வாயிலாக மிக எளிதாக நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி ஓட்டு வேட்டையாடியது தி.மு.க., ஆனால், இரண்டரை ஆண்டுகளாகியும், அதற்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அமைச்சர் உதயநிதி 'நீட்' தேர்வு ரத்து செய்ய, ரகசியம் இருக்கிறதுஎன்றார்.ஏதோ பெரிய ரகசியம் வைத்திருக்கிறார் போல, என்று அந்த ரகசியத்தை அறிய காத்திருந்தோம். ஆனால், இதுவரை தெரிவிக்கவில்லை.இதற்குப் பின், இன்னொரு கூத்து நடத்தினர். நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி, மக்களிடம் பல லட்சம் கையெழுத்து பெற்றனர். அதை ஜனாதிபதியிடம் வழங்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், அண்மையில் நடந்த, தி.மு.க., இளைஞரணி மாநாட்டில், மக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட அட்டைகளை குப்பை தொட்டியில் வீசி விட்டனர். இது தான் நீட் தேர்வு விலக்கு விஷயத்தில்,தி.மு.க.,வுக்கு இருக்கும் அக்கறை.எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, மக்களிடம், கோரிக்கைகளை மனுவாக எழுதி பெட்டியில் போடுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் குறைகளை களைவோம் என்றார்.மேலும், 'நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், பெட்டியில் போட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் என்னுடைய அறையில் என்னை சந்தித்து குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்' என்றார். இந்த குறைபாடுகளை களைய, இதுவரை எத்தனை பேரை முதல்வர் சந்தித்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட அவரை சந்திக்க முடியவில்லை. இப்படி முதல்வர் ஸ்டாலினும், அவருடைய மகன் அமைச்சர் உதயநிதியும், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு, அவர்பேசினார்.
5 hour(s) ago | 1